மனுஷன ஃபிரீயா விட மாட்டீங்களா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியை கோபமாக விளாசிய ரோஹித் சர்மா

Rohit Sharma 55
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. அவருடைய தலைமையில் ஆரம்பம் முதலே சுமாராக விளையாடிய மும்பை 14 போட்டிகளில் 10 தோல்விகளை பதிவு செய்தது.

அதனால் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை பிடித்த மும்பை பரிதாபமாக வெளியேறியது. முன்னதாக இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே ரோஹித்தை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு ஹர்திக் பாண்டியா வற்புறுத்தியது ரசிகர்களை கோபமடைய வைத்தது. அத்துடன் கடைசிக்கட்ட போட்டிகளில் அவரை மும்பை நிர்வாகம் வலுக்கட்டாயமாக இம்பேக்ட் வீராராக இறக்கியது.

- Advertisement -

விளாசிய ரோஹித்:
அதனால் மேலும் கோபமடைந்த ரசிகர்கள் அடுத்தடுத்து அவமானப்படுத்தும் மும்பை அணியிலிருந்து ரோஹித் சர்மா வெளியேறி அடுத்த வருடம் வேறு அணிக்கு விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த நிலையில் மும்பை – கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. அப்போது கொல்கத்தா அணி உடைமாற்றுக்கும் சென்ற ரோகித் சர்மா அங்குள்ள வீரர்களுடன் மணி கணக்கில் அமர்ந்து பேசினார்.

அதை விட கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரிடம் “நான் கட்டிய கோவிலில் ஒவ்வொன்றாக மாறுகிறது. எனவே இதுவே எனக்கு கடைசி” என்று பேசியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பதிவானது. அதன் காரணமாக அடுத்த வருடம் ரோஹித் கொல்கத்தா அணிக்கு விளையாடுவார் என்று ரசிகர்கள் பேசத் துவங்கினர்.

- Advertisement -

இருப்பினும் அதை கொல்கத்தா அணியின் இயக்குனர் வெங்கி மைசூர் மறுத்து விட்டார். அதைத்தொடர்ந்து லக்னோவுக்கு எதிரான போட்டியிலும் அவர் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே போல வீடியோ எடுத்த கேமராமேனை கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என்று ரோஹித் சர்மா கேட்டுக் கொண்டார். ஆனால் அப்போதும் கேட்காத ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அந்த வீடியோவையும் ஒலியுடன் வெளியிட்டது.

இந்நிலையில் அதற்கு ரோகித் சர்மா ட்விட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பின்வருமாறு. “வீரர்களின் வாழ்க்கை மிகவும் ஊடுருவக் கூடியதாக மாறிவிட்டது. இப்போது பயிற்சி அல்லது போட்டி நாட்களில் நமது நண்பர்கள் மற்றும் ஊழியர்களுடன் தனியுரிமையில் நாம் பேசும் உரையாடல்கள் கேமராக்களில் பதிவு செய்யப்படுகின்றன”

இதையும் படிங்க: தோனி மேல தப்பில்ல.. ஆர்சிபி பிளேயர்ஸ் அப்படி பண்ணிருக்கக் கூடாது.. மைக்கேல் வாகன் அதிருப்தி

“எனது உரையாடலை பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கேட்டுக் கொண்ட போதிலும் அது ஒளிபரப்பப்பட்டது. இது தனியுரிமையை மீறுவதாகும். பிரத்தியேகமான உள்ளடக்கத்தை பெறுவதற்காக இப்படி செய்வது ஒருநாள் ரசிகர்கள் வீரர்கள் இடையேயான நம்பிக்கையை உடைக்கும். எனவே நல்லுணர்வு மட்டுமே மேலோங்கட்டும்” என்று கூறினார்.

Advertisement