IND vs BAN : தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை அசிங்கமாக திட்டினாரா ரோஹித்? – நடந்தது என்ன?

Rohit-and-Sundar
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றதில் இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா அவ்வப்போது மைதானத்தில் கோவப்படும் பழக்கத்தை நாம் பலமுறை கண்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய போட்டியிலும் அவர் பலமுறை கோவப்பட்டது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றுள்ளது. அதன்படி இன்று டாக்கா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்று முடிந்தது.

அந்தவகையில் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 41.2 ஓவர்களில் 186 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது துவக்கத்திலிருந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் பின்னர் ஒரு கட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 136 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

வெற்றிக்கு இன்னும் 51 ரன்கள் தேவை என்பதால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணியே வெற்றி பெறும் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் இறுதி விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் சேர்ந்த மெகதி ஹாசன் மற்றும் முஸ்தபிசூர் ரகுமான் ஆகியோரது ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

இந்த போட்டியின் போது முக்கியமான கட்டத்தில் 43-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரின் ஒரு பந்தில் மெஹதி ஹாசன் கொடுத்த எளிய கேட்சை கே.எல் ராகுல் தவறவிட்டார். இதனால் கடுப்பான ரோஹித் அவரை முறைத்து பார்த்தபடியே இருந்தார். ஆனால் அதற்கு அடுத்த பந்தும் மெஹதி ஹாசன் தூக்கி அடிக்க அது ஆப் சைடில் இருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை நோக்கி சென்றது.

- Advertisement -

பந்து வருவதை விளக்கு வெளிச்சத்தில் சரியாக கணிக்காத வாஷிங்டன் சுந்தர் பந்தினை கேட்ச் செய்ய செல்லாமல் பந்து விழுந்தவுடன் அதை எடுத்து த்ரோ செய்தார். அப்போது வாஷிங்டன் சுந்தர் ஏன் கேட்சுக்கு வரவில்லை என்று கோபம் அடைந்த கேப்டன் ரோஹித் அவரை நோக்கி சில ஆவேசமான வார்த்தைகளை உதித்தார்.

இதையும் படிங்க : IND vs BAN : ஜெயிக்க வேண்டிய இந்த போட்டியை நாம தோக்க நீங்கதான் காரணம் – நட்சத்திர வீரரை விளாசும் ரசிகர்கள்

அவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது மட்டுமின்றி இளம் வீரரான சுந்தர் மீது இவ்வளவு கோபத்தை காண்பிக்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement