IND vs BAN : ஜெயிக்க வேண்டிய இந்த போட்டியை நாம தோக்க நீங்கதான் காரணம் – நட்சத்திர வீரரை விளாசும் ரசிகர்கள்

Bangladesh
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது இன்று டாக்கா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது வங்கதேச அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ரன் குவிக்க திணறியது.

INd vs Ban Shreyas Iyer Ebodad Hussain

- Advertisement -

இறுதியில் 50 ஓவர்களை கூட முழுவதுமாக பிடிக்காமல் 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 73 ரன்களை குவித்தார். அவரை தவிர்த்து வேறுயெந்த வீரரும் 30 ரன்களை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது 46 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

KL Rahul

இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்ததால் நிச்சயம் இந்திய அணியே இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் கைகோர்த்த மெஹதி ஹாசன் மற்றும் முஸ்தஃபீசூர் ரகுமான் ஆகியோர் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து 51 ரன்கள் குவித்து வங்கதேச அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது 43-வது ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சில் மெஹதி ஹாசன் தூக்கி அடிக்க கைக்கு வந்த எளிமையான கேச்சை விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் தவறவிட்டார். அவர் தவறவிட்டது அந்த கேச்சை மட்டுமல்ல போட்டியின் வெற்றியையும் தான் என்பது முடிவில் தெரிந்தது.

இதையும் படிங்க : இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு – ரிஷப் பண்ட் கழற்றி விடப்பட்டதற்கான காரணத்தை உடைக்கும் ரசிகர்கள்

இப்படி வெற்றிக்கு அருகில் எளிதான கேட்சை தவறவிட்ட கே.எல் ராகுலை தற்போது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை உங்களால்தான் தோற்றோம் என்றும் கே.எல் ராகுலுக்கு எதிராக தங்களது காட்டமான பதிவுகளை சமூக வலைதளத்தின் மூலமாக அவர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement