இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு – ரிஷப் பண்ட் கழற்றி விடப்பட்டதற்கான காரணத்தை உடைக்கும் ரசிகர்கள்

Rishabh Pant
- Advertisement -

2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் வங்கதேசம் பயணித்துள்ள இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அடங்கிய முதன்மை அணி விளையாடும் இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 4ஆம் தேதியன்று டாக்கா நகரில் நடைபெற்றது. அதில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பிய 1 விக்கெட் வித்யாசத்தில் தலை குனியும் தோல்வியை சந்தித்தது.

முன்னதாக அப்போட்டியில் விக்கெட் கீப்பராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்டுக்கு பதில் துணை கேப்டன் கேஎல் ராகுல் 5வது இடத்தில் களமிறங்குவார் என்று ரோகித் சர்மா அறிவித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இருப்பினும் ரிசப் பண்ட் விளையாடுவதற்கு லேசான காயம் என்று ரோகித் சர்மா தெரிவித்ததார். ஆனால் அடுத்த சில நொடிகளில் வங்கதேச ஒருநாள் தொடரிலிருந்து ரிசப் பண்ட் நீக்கப்படுவதாகவும் பின்னர் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் அணியில் இணைந்து கொள்வார் என்றும் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது ரசிகர்களை சந்தேகிக்க வைத்தது.

- Advertisement -

நம்புற மாதிரியா இருக்கு:
ஏனெனில் ரோகித் சர்மா லேசான காயம் என்று பெயரை குறிப்பிடாமல் தெரிவித்த நிலையில் நிலையில் மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி நீக்கியதாக அறிவித்த பிசிசிஐ ரிஷப் பண்ட்டுக்கு காயம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. அதனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகம் தான் வேண்டுமென்றே அவரை காயம் என்ற பெயரில் கழற்றி விட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உண்மையை உடைக்கிறார்கள். ஏனெனில் நியூசிலாந்து தொடரில் முழுமையாக விளையாடிய அவர் இத்தொடருக்கான அணியிலும் காயமின்றி இணைந்தார்.

1. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சும் அளவுக்கு செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிரந்தர விக்கெட் கீப்பராக இடம் பிடித்துள்ள ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் 65 போட்டிகள் என்று அதிகப்படியான வாய்ப்புகளை பெற்றும் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டதில்லை. அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் கடந்த ஜூலையில் இங்கிலாந்து மண்ணில் அடித்த சதத்தை தவிர்த்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் சுமாராகவே செயல்பட்டார்.

- Advertisement -

2. ஆனாலும் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் தன்னை நிரூபித்துள்ள அவரை அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக உருவாக்க நினைக்கும் பிசிசிஐ தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி காட்டுவது போல் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அசத்துவார் என்ற கண்ணோட்டத்தில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து தொடரில் அவருக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

3. ஆனால் அதிலும் சொதப்பிய தவறிய அவர் 1 முதல் 7 வரை ராஜா வீட்டுப் பிள்ளையை போல் அனைத்து இடங்களிலும் வாய்ப்பு பெற்றும் சுமாராக செயல்பட்டதால் சமீப காலங்களாகவே பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகத்தை நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

4. குறிப்பாக காலம் காலமாக வாய்ப்புக்காக தவமாய் காத்து கிடக்கும் சஞ்சு சாம்சன் இந்த வருடம் நல்ல ஃபார்மில் இருந்தும் சுமாராக செயல்படும் பண்ட்க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுவது ஏன்? என்ற கேள்வி இந்தியா முழுவதும் எதிரொலித்தது.

5. அந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே நல்ல முறையில் பேட்டி எடுத்த போது அவரிடம் “என்னுடைய சாதனைகள் மோசமாக இல்லை. 25 வயதிலேயே என்னை யாருடன் ஒப்பிடாமல் 32 வயதில் ஒப்பிடுங்கள்” என்று ரிஷப் பண்ட் திமிராக பதிலளித்தது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

6. அந்த நடத்தையால் அதிருப்தியடைந்த அணி நிர்வாகமும் ஏற்கனவே தாங்கிக்கொண்ட விமர்சனங்களுக்கு பதிலடியாக தற்போது அவரை போலியான காயம் என்ற பெயரில் மொத்தமாக இந்த ஒருநாள் தொடரிலிருந்து விடுவித்துள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். அதற்கு நல்ல டெஸ்ட் வீரராக அறியப்படும் ரிஷப் பண்ட் இன்னும் 9 நாட்களில் துவங்கும் டெஸ்ட் தொடருக்காக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதே சாட்சி என்றும் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

Advertisement