- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடப்போகும் இடம் இதுதான் – சுயநலமற்ற எண்ணம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாக தனது இரண்டாவது குழந்தை பிறப்பின் காரணமாக இந்தியாவில் இருந்த ரோகித் சர்மா ஆஸ்திரேலியா பயணிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியை தவறவிட்ட அவர் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக நேரடியாக ஆஸ்திரேலியா சென்று இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டார்.

ரோஹித் சர்மா விளையாடப்போகும் இடம் :

அதனை தொடர்ந்து அடிலெய்டு ண்டகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய அவர் அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் பகலிரவு போட்டியாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ரோகித் சர்மா இந்தியாவின் தோல்விக்கும் மிக முக்கியமான காரணமாக அமைந்தார். அதோடு அவரது பேட்டிங் ஆர்டரும் இந்த தொடரில் எவ்வாறு இருக்கும் என்கிற விவாதங்களும் இருந்து வருகின்றன.

ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியின் போது ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் காரணமாக அந்த ஜோடியை பிரிக்கக்கூடாது என்பதற்காக அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் அவர்களே துவக்க வீரர்களாக விளையாடியிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சோபிக்க தவறிய அவர்கள் இருவரையும் அடுத்த போட்டியில் துவக்க வீரர்களாக களமிறக்குவார்களா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த மூன்றாவது போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் துவக்க வீரர்களுக்கான இடத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தான் தொடர்ந்தும் மிடில் ஆர்டரில் தான் விளையாடுவேன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உறுதி அளித்து இருந்தார்.

இதையும் படிங்க : 145 ரன்ஸ்.. கடைசி பந்தில்.. 5 வருடம் கழித்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வே சாதனை வெற்றி

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா நிச்சயம் மிடில் ஆர்டரில் தான் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

- Advertisement -