பார்ம் அவுட்டானதன் எதிரொலி.. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராக – ரோஹித் சர்மா எடுத்துள்ள புதிய முடிவு

Rohit
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். ஆனால் தற்போது 37 வயதை எட்டியுள்ள ரோகித் சர்மா தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் வேளையில் கடந்த சில டெஸ்ட் தொடர்களாகவே அவர் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதால் விரைவில் அவரை ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்ற அழுத்தமும் அவருக்கு அதிகரித்துள்ளது.

பார்ம் அவுட்டான ரோஹித் சர்மா எடுத்துள்ள அதிரடி முடிவு :

அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய தொடர் முடிந்த பின்னர் அவர்மீது அதிகளவு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்காத அவர் அடுத்ததாக விளையாடிய 3 போட்டிகளில் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 10 ரன்கள் சராசரியுடன் 31 ரன்களை மட்டுமே குவித்தார்.

- Advertisement -

இதன் காரணமாக ஃபார்ம் அவுட்டான அவர் கடைசியாக நடைபெற்ற சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகினார். தனது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருப்பதாலே கடைசி போட்டியில் நான் பங்கேற்கவில்லை என்றும் ரோகித் சர்மாவை வெளிப்படையாக அறிவித்திருந்தார். இதன் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது அவருக்கு மிக முக்கிய தொடராக மாறியுள்ளது.

ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றவில்லை என்றால் ரோகித் சர்மா ஒட்டுமொட்டுமாக ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் பார்மின்றி தவிக்கும் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் ஒரு புதிய அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

அந்த வகையில் எதிர்வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெற இருக்கும் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மும்பை அணியின் சார்பாக ரோகித் சர்மா விளையாட இருப்பதாக அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்காக வரும் செவ்வாய், புதன், வியாழன் கிழமை நடைபெற இருக்கும் ரஞ்சி பயிற்சியிலும் அவர் மும்பை வான்கடே மைதானத்தில் பங்கேற்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : இதை செய்ஞ்சா மட்டும் தான் அவரோட பிரச்சனை சரியாகும்.. பும்ராவின் காயம் குறித்து – வெளியான டாக்டர் ரிசல்ட்

இப்படி ரோஹித் சர்மா பேட்டிங் பார்மின்றி தவித்து வரும் வேளையில் மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்து பயிற்சி செய்வது மட்டுமில்லாமல் ரஞ்சி போட்டியிலும் அவர் விளையாட உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக 2015-ஆம் ஆண்டு உத்தரபிரதேச அணிக்கு எதிராக ரஞ்சி போட்டியில் விளையாடிய அவர் தற்போது மீண்டும் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து ரஞ்சி கிரிக்கெட்டிற்கு திரும்பவ உள்ளது ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement