இதை செய்ஞ்சா மட்டும் தான் அவரோட பிரச்சனை சரியாகும்.. பும்ராவின் காயம் குறித்து – வெளியான டாக்டர் ரிசல்ட்

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த தொடரில் அதிக விக்கெடுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக மட்டுமின்றி தொடர்நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார்.

பும்ராவின் காயம் குறித்து வெளியான மருத்துவ அறிக்கை :

அந்த அளவிற்கு அவரது பந்துவீச்சு ஆஸ்திரேலிய தொடரில் அசத்தலாக இருந்தது. இருந்தாலும் அந்த ஆஸ்திரேலியா தொடரின் இறுதி போட்டியானது சிட்னி மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அசவுகரியத்தை சந்தித்த பும்ரா முதல் இன்னிங்சின் பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

அதன்பிறகு சிறிது நேரத்தில் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் மட்டும் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரை முடித்து நாடு திரும்பிய வேளையில் அவருக்கு ஏற்பட்ட காயம் என்ன ஆனது? அவர் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்று பல்வேறு கேள்விகள் அவரை சுற்றி இருந்து வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே வெளியான தகவலின் படி இங்கிலாந்து தொடரில் அவர் இடம் பெறவில்லை என்றாலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் தற்போது வெளியாகியுள்ள மருத்துவர்களின் அறிக்கைபடி : அவர் நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. ஏனெனில் பும்ராவிற்கு முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் தற்போது தீவிரம் அடைந்துள்ளதால் அவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ராவை என்கூட கம்பேர் பண்ணாதீங்க ப்ளீஸ்.. காரணத்தோடு விளக்கம் கொடுத்த – கபில் தேவ்

அந்த வகையில் பார்க்கையில் நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பும்ரா தவறவிட அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா விளையாடமுடியாமல் போனால் அது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக மாறும். அதோடு இந்த மூன்று மாத ஓய்வு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால் எதிர்வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement