வேறு எந்த இந்திய கேப்டனும் படைக்காத மோசமான சாதனைக்கு சொந்தமாகும் ரோஹித்? ரசிகர்கள் ஏமாற்றம்

Rohit Sharma 2
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது. அதில் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய அடுத்த 3 போட்டிகளில் இந்தியா 2 தோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது.

அதே போல 2025 உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் ஃபைனல் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது. அந்த தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா அவருடைய தலைமையில் வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

நீக்கப்பட்ட ரோஹித்:

அதற்கும் முக்கிய காரணமாக அமைந்த அவர் இத்தொடரில் பேட்டிங்கில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதே போல கேப்டனாகவும் முக்கிய முடிவுகளை எடுப்பதில் ரோகித் சர்மா சுமாராகவே செயல்பட்டார். அதனால் ஓய்வு பெறுமாறு அவரை இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள். அந்த சூழ்நிலையில் ஐந்தாவது போட்டியில் ரோகித் சர்மா இந்திய அணியின் நலனுக்காக விலக முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் எஞ்சிய வாய்ப்பையும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளவும் ஐந்தாவது போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அது போன்ற சூழ்நிலையில் சுமாரான ஃபார்மில் இருப்பதால் ரோஹித் சர்மாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவை தலைமை தாங்க உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

முதல் கேப்டன்:

அது உண்மையாகும் பட்சத்தில் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றிலேயே ஒரு தொடரின் பாதியில் நீக்கப்பட்ட முதல் கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு ரோஹித் சர்மா சொந்தக்காரராக ஆவார். ஏனெனில் தற்போதைய ஃபார்மை வைத்து ரோஹித் தாமாக விலகுகிறார், ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்வது பெயருக்காக மட்டுமே இருக்கும். உண்மையில் சுமாரான ஃபார்ம் காரணமாகவே அவரை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்த முடிவை எடுக்க வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: எல்லாம் இருந்தும் இப்படி செய்யலாமா? ரிஷப் பண்ட்டை ஸ்டுப்பிட் என திட்டியது ஏன்? கவாஸ்கர் விளக்கம்

அந்த வகையில் வரலாற்றில் வேறு எந்த இந்திய கேப்டனும் இது போன்ற ஒரு மோசமான சூழ்நிலையை சந்தித்ததில்லை. உலகளவில் கடைசியாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் 2014 ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் போலவே தம்மைத்தானே நீக்கிக் கொண்டார். அதே வருடம் தினேஷ் சண்டிமால் டி20 உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றி தம்மைத்தானே பெஞ்சில் அமர வைத்துக் கொண்டார். அவருக்கு பதிலாக கேப்டனாக பொறுப்பேற்ற மலிங்கா இலங்கைக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

Advertisement