எல்லாம் இருந்தும் இப்படி செய்யலாமா? ரிஷப் பண்ட்டை ஸ்டுப்பிட் என திட்டியது ஏன்? கவாஸ்கர் விளக்கம்

Sunil Gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. 2 – 1* என்ற கணக்கில் இருக்கும் அந்தத் தொடரின் கடைசி போட்டி ஜனவரி 3ஆம் தேதி துவங்குகிறது. குறைந்தபட்சம் அந்தக் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளவும் எஞ்சிய 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளவும் 5வது போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.

முன்னதாக கடந்த வருடம் காபாவில் 89* ரன்கள் அடித்த ரிஷப் பண்ட் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் இம்முறை திறமை இருந்தும் டி20 போல அவர் அதிரடியாக விளையாடி தேவையின்றி தம்முடைய விக்கெட்டை பரிசளித்து வருகிறார். அதனால் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு காரணமான அவரை நான்காவது போட்டியில் ஸ்டுப்பிட் என்று சுனில் கவாஸ்கர் நேரலையில் கடுமையாக விமர்சித்தார்.

- Advertisement -

ஸ்டுப்பிட் விமர்சனம்:

இந்நிலையில் அதற்கான காரணம் பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் இந்த விளையாட்டும் இந்திய கிரிக்கெட்டும் தான் என்னை உருவாக்கியது. எனவே ரிஷப் பண்ட் போன்ற திறமையானவர் அப்படி அவுட்டானதை பார்த்தது ஏமாற்றமாக அமைந்தது. அதற்கு முந்தைய பந்தில் அவர் விளையாடியதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை”

“ஆனால் அடுத்த பந்தில் அவர் தன்னுடைய அப்படி அவுட்டாக ஈகோ தான் காரணம். இங்கே யார் பாஸ் என்று பவுலரிடம் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் பேட்டிங் செய்து அவுட்டானர். ஆனால் டெஸ்ட் போட்டிகள் அவ்வளவு சுலபமல்ல. அவருக்காக இரண்டு புறங்களிலும் ஆஸ்திரேலியா 2 ஃபீல்டர்களை நிறுத்தி இருந்தது. ஆனால் மெல்போர்ன் போன்ற பெரிய மைதானத்தில் அது எளிதல்ல”

- Advertisement -

ஈகோ காரணம்:

“அது தெரிந்தும் ரிஷப் பண்ட் தன்னுடைய விக்கெட்டை கொடுத்தார். இதற்கு முன் அவர் அற்புதமான ஆட்டங்களை விளையாடி நான் பார்த்துள்ளேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் இப்படி அடித்தால் தான் ரன்கள் அடிக்க முடியும் என்று அவர் சிந்திப்பது போல் தெரிகிறது. அவர் இறங்கி சென்று பந்தை தூக்கி அடித்து பவுண்டரிக்கு அனுப்ப முயற்சிக்கிறார்”

இதையும் படிங்க: 5வது டெஸ்டில் ரோஹித் விலகல்.. கேப்டனாக பும்ரா.. 4 அதிரடி மாற்றங்கள் பற்றி வெளியான தகவல்

“ஆனால் கடந்த காலங்களில் அவர் அப்படி மட்டுமே விளையாடவில்லை. கவர் ட்ரைவ், ஸ்கொயர் கட், ஃபுல் ஷாட், பிளிக் ஆஃப் போன்ற அனைத்து வகையான ஷாட்டுகளும் அவரிடம் இருக்கிறது. ஆம் ஒருவேளை அது சிக்ஸர் போயிருந்தால் நானே அவரை பாராட்டியிருப்பேன். ஆனால் அங்கே நீங்கள் கொஞ்சமும் கவலையின்றி கவனம் இல்லாமல் பேட்டை சுழற்றி அவுட்டானீர்கள். அப்படி அவர் கோட்டை விட்டார்” என்று கூறினார்.

Advertisement