இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தேர்வான ரோஹித் சர்மா.! உடற்தகுதி சுற்றில் தேறியது எப்படி..!

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வரும் மாதங்களில் தொடர்ந்து பல தொடர்களில் விளையாட உள்ளது. அந்த தொடர்களில் விளையாடும் வீரகர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ‘யோ யோ’ டெஸ்ட் என்ற பிட்னெஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதில் தேர்வாகவும் வீரர்களை மட்டுமே விளையாட்டு தொடர்களில் விளையாட இந்துய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கிறது. இந்த தேர்வில் இந்திய அணி அதிரடி ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடு தோல்வியடைந்துளர்.

rohit

- Advertisement -

இந்திய அணி வரும் மாதங்களில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான வீரர்களை ஏற்கனவே அறிவித்திருந்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இதனால் அவர்கள் அனைவருக்கும் யோ யோ எனப்படும் பிட்னஸ் டெஸ்ட் கடந்த 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்ற இந்த டெஸ்டில், இந்திய வீரர்களான தோனி, கோலி , ரெய்னா உள்ளிட்டோர் தகுதி பெற்றனர்.

ஜூன் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த டெஸ்டில் இந்திய அணியின் ஹிட் மேன் என்றழைக்கபடும் ரோஹித் ஷர்மா பங்கேர்க்காமல் இருந்து வந்தார். இதனால் இவர் இந்திய அணியில் இனிவரும் தொடர்களில் பங்கேற்க மாட்டாரா என்ற எண்ணம் எழுந்தது. இருப்பினும் ரோஹித் ஷர்மாவிற்கு மறு வாய்ப்பு வழங்கபட்டிருந்தது. சில காரணங்களால் யோ யோ டெஸ்டில் பங்கேற்காமல் இருந்த நேற்று (ஜூன் 20 ) பங்குபெற்றார்.

rohitsharma

நேற்று பெங்களுரில் உள்ள தேசிய விளையாட்டு அகடமியிள் யோ யோ டெஸ்டில் நிர்ணயிக்கபட்ட 16.3 புள்ளிகளை பெற்று தகுதி பெற்றார். இதன் மூலம் இந்திய அணி வரும் மாதங்களில் விளையாட உள்ள இயர்லாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுடன் மோதும் தொடர்களில் ரோஹித் பங்குபெறுவது உறுதியாகியுள்ளது. ஒரு வேலை ரோஹித் இந்த தேர்வில் தொற்றிருந்தால் அவருக்கு பதிலாக அஜிங்கியா ரஹானே தேர்வாகி இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement