- Advertisement -
இந்திய கிரிக்கெட்

500-ஆவது போட்டியில் இப்படியா நடக்கனும்? ரோஹித் சர்மா அளித்த ஏமாற்றம் – ரசிகர்கள் வேதனை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது பெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடுகையில் போட்டி பலமுறை மழையால் தடைபட்டது.

ரோஹித் சர்மா அளித்த ஏமாற்றம் :

இதன் காரணமாக இந்த முதலாவது ஒருநாள் போட்டியானது 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி விளையாடிய இந்திய அணியானது 26 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 38 ரன்களையும், அக்சர் பட்டேல் 31 ரன்களையும் குவித்திருந்தனர். இன்றைய போட்டியில் தனது 500-வது ஆட்டத்தில் களமிறங்கிய ரோகித் சர்மா 14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

கேப்டன் பதவி நீக்கத்திற்கு பிறகு இந்த ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்து ரோஹித் சர்மா இப்படி முதல் போட்டியிலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதோடு நட்சத்திர மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலியும் டக் அவுட்டாகி வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த இலக்கினை மிக எளிதாக துரத்திய ஆஸ்திரேலிய அணி 21.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க : 8க்கு 8.. ஆஸி அசால்ட்டான வெற்றி.. கில் தலைமையில் நொறுங்கிய இந்தியாவின் வெற்றி நடை

2027 உலககோப்பை தொடரில் விளையாட விரும்பும் ரோஹித் சர்மா இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளதால் மீண்டும் அவரது பேட்டிங் பார்ம் மீது விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -