பாவங்க அவருக்கு வைரல் பீவர் வந்துடுச்சி. அதான் இந்த கடைசி மேட்ச்ல விளையாட முடியல – கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்

Rohit-Toss
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது இந்த தொடரை ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று செப்டம்பர் 27-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் சற்று முன்னர் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியின் முதல் இரண்டு போட்டிகளில் இடம் பெறாத சீனியர் வீரர்கள் மூன்றாவது போட்டியில் அணிக்கு திரும்பியுள்ளதால் தற்போது இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

அதேவேளையில் ஏகப்பட்ட வீரர்கள் இந்த மூன்றாவது போட்டியில் விளையாட முடியாத சூழலில் இந்திய அணி வெறும் ஐந்து பேட்ஸ்மேன்களுடன் மட்டுமே களமிறங்கியுள்ளது ரசிகர்களிடைய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் இடதுகை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் இன்றைய மூன்றாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று ரோகித் சர்மா அறிவித்ததும் அனைவரும் அதிருப்தி அடைந்தனர். ஏனெனில் சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் இன்றைய போட்டியில் விளையாடாதது ஏன்? எனபதே பலரது கேள்வியாகவும் உள்ளது. ஆனால் அதற்கான விளக்கத்தை டாசின் போதே ரோஹித் சர்மா அறிவித்திருந்தார். அதன்படி அவர் கூறுகையில் : இஷான் கிஷனுக்கு வைரல் காய்ச்சல் என்பதால் இந்த போட்டியில் அவர் விளையாடவில்லை. அதேபோன்று அஸ்வினும் இந்த போட்டியில் விளையாடவில்லை என்பதால் அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவதாக அறிவித்தார்.

இதையும் படிங்க : IND vs AUS : ஒரே போட்டியில் இத்தனை மாற்றங்களா? புரிஞ்சிக்கவே நேரம் ஆகும் போலயே – இந்திய அணியின் முழுலிஸ்ட் இதோ

மேலும் இந்த போட்டியில் சுப்மன் கில், ஷர்துல் தாகூர், ஹார்டிக் பாண்டியா, முகமது ஷமி என பலரும் இடம்பெறாததால் இந்த போட்டியில் இந்திய அணி எவ்வாறு ஆஸ்திரேலிய அணியை சமாளிக்கப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரும் மத்தியிலும் எழுந்துதுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement