தீபக் ஹூடாவுக்கு ஏன் பவுலிங் சான்ஸ் கொடுக்கல – ரசிகர்களின் கேள்விக்கு ரோஹித்தின் மலுப்பலான பதில் இதோ

Deepak-Hooda
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் சூப்பர் 4 சுற்றில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் தோற்றது. அதனால் வென்றே தீரவேண்டும் என்ற வாழ்வா சாவா நிலைமையில் இலங்கையை எதிர்கொண்ட இந்தியா மீண்டும் அதேபோல் முக்கிய நேரங்களில் சொதப்பி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் ஆரம்பத்தில் அசால்டாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்த்த இந்திய அணி தற்போது பைனலுக்கு கூட செல்லாமல் வெளியேறுவது உறுதியாகியுள்ளது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

IND vs SL

- Advertisement -

இந்த தொடரின் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற நிலையில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்பாக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியது பின்னடைவை ஏற்படுத்தியது. அதற்காக அடுத்த போட்டியில் அவரைப் போன்றே சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இருக்கும் இளம் வீரர் தீபக் ஹூடாவை சேர்த்த கேப்டன் ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக்கை சம்பந்தமின்றி நீக்கினார்.

அதேபோல் ரன்களை வாரி வழங்கியதால் அதிரடியாக நீக்கப்பட்ட ஆவேஷ் கானுக்கு பதில் தேர்வு செய்ய தீபக் சஹார் போன்ற வேறு வேகப்பந்து வீச்சாளர் அணியில் இல்லாத காரணத்தால் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை 3வது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்திய அவர் பாகிஸ்தான், இலங்கை ஆகிய 2 அணிகளுக்கு எதிரான போட்டியிலும் புவனேஸ்வர் குமார், சஹால் ஆகியோர் தடுமாறிய போது தீபக் ஹூடாவுக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை.

Dinesh-Karthik

ரசிகர்கள் கேள்வி:
அதே போல் பொதுவாக டாப் ஆர்டரில் விளையாடி பழகிய தீபக் ஹூடாவை போய் தினேஷ் கார்த்திக் விளையாடக் கூடிய 6, 7 போன்ற லோயர் மிடில் ஆர்டரில் ரோகித் சர்மா பயன்படுத்தினார். எனவே இதற்கு முன் பினிஷிங் செய்த அனுபவமில்லாத அவர் சொற்ப ரன்களில் அவுட்டானதற்கு ரோகித் சர்மா அல்லது அணி நிர்வாகம் தான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. அதைவிட அப்படி டாப் ஆர்டரில் பயன்படுத்தாமல் ஒரு ஓவர் கூட பந்து வீசவும் வாய்ப்பு வழங்கவில்லை என்றால் எதற்காக தீபக் ஹூடாவை தேர்வு எதற்காக செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பும் ரசிகர்கள் அதற்கு தினேஷ் கார்த்திக்கே விளையாடி இருக்கலாமே என்ற நியாயமான கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

- Advertisement -

மழுப்பலான பதில்:
இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் இந்த கேள்விக்கு போட்டி முடிந்த பின் பதிலளித்த ரோகித் சர்மா தீபக் ஹூடாவை பயன்படுத்துவதற்கான சரியான தருணம் அமையாததால் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று மழுப்பலான பதிலை அளித்துள்ளார். அதே போல் வேண்டுமென்றே 3 பந்துவீச்சாளர்களை மட்டும் இந்த தொடரில் சோதனை முயற்சியாக பயன்படுத்தி பார்த்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

Hooda-2

“நான் தீபக் ஹூடாவை பந்துவீச்சு அழைப்பது பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்தத் திட்டம் நாங்கள் நினைத்தபடி வேலை செய்யவில்லை. ஆவேஷ் கான் சற்று உடல் நிலை சரியில்லாமல் சிறப்பாக பந்துவீசி தடுமாறினார். உலகக்கோப்பைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது எங்களது அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பர். ஆனால் இப்போது 3 வேகப்பந்து வீச்சாளர்களை முயற்சி செய்து பார்த்தோம்” என்று கூறினார்.

- Advertisement -

அதே போல் இந்த தோல்வியால் இந்தியா தரத்தில் குறைந்து விடவில்லை என்று தெரிவித்த அவர் தோற்றாலும் தங்களது அணி சிறந்த அணி தான் என்று நம்பிக்கையுடன் பேசினார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “நாங்கள் தோல்வியடைந்த அணியில் இருந்தோம் அவ்வளவுதான். நாங்கள் அடித்த ரன்களுக்கு இன்னும் சற்று சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். ஏனெனில் 10 – 15 ரன்கள் வெற்றிக்கு குறைவாக இருந்தது”

இதையும் படிங்க : அந்த தமிழக வீரருக்கு என்ன குறை? அவரை மட்டும் ஏன் டீம்ல சேக்கவே மாட்றீங்க – ஹர்பஜன் சிங் கோபம்

“மேலும் மிடில் ஆர்டரில் வரும் வீரர்கள் எந்த மாதிரியான ஷாட் அடிக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இருப்பினும் நீண்ட காலமாக வெற்றி நடை போட்டு வரும் எங்களுக்கு இந்த தோல்வி நல்ல பாடங்களை கற்க உதவியாக இருக்கும். அதிரடியான தொடக்கத்தை பெற்ற இலங்கையை முடிந்தளவுக்கு எங்களது பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். ஆனால் இறுதியில் இலங்கை சிறப்பாக செயல்பட்டது” என்று கூறினார்.

Advertisement