அந்த தமிழக வீரருக்கு என்ன குறை? அவரை மட்டும் ஏன் டீம்ல சேக்கவே மாட்றீங்க – ஹர்பஜன் சிங் கோபம்

Harbhajan
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய இந்தியானது தற்போது “சூப்பர் 4” சுற்றுகளில் அடுத்தடுத்த தோல்வியை சந்தித்துள்ளது பெரிய விமர்சனத்தை பெற்றுள்ளது. ஏனெனில் லீக் சுற்றில் எளிமையாக பாகிஸ்தான அணியை வீழ்த்திய இந்திய அணியானது “சூப்பர் 4” சுற்றில் அவர்களிடம் தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி இந்திய அணியை விட பலம் குறைவாக பார்க்கப்படும் இலங்கை அணியிடமும் இந்திய அணி நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தது.

IND vs SL

அதன்படி நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டம் காரணமாக 173 ரன்கள் குவித்தும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த இலங்கைக்கு எதிரான தோல்விக்கு பிறகு இந்திய அணி இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது என்றே கூறலாம்.

- Advertisement -

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் இலங்கை அணிக்கு எதிரான தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் சில காட்டமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் உம்ரான் மாலிக் எங்கே? அற்புதமாக பந்தை ஸ்விங் செய்து வீசும் தீபக் சாகருக்கு ஏன் அணியில் இடம் பெறவில்லை? இதற்கெல்லாம் உங்களால் பதில் சொல்ல முடியுமா? அவர்கள் அந்த வாய்ப்புக்கு தகுதியானவர்கள் கிடையாதா? என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதேபோன்று தினேஷ் கார்த்திக்கு ஏன் தொடர்ச்சியாக வாய்ப்புகளை மறுத்து வருகிறார்கள்? இதற்கெல்லாம் விடை புரியவில்லை வருத்தமாக உள்ளது என தனது அதிருப்தியை அவர் தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அறுவைசிகிச்சை முடிந்த கையோடு இந்திய அணிக்கு திரும்புவது குறித்து – முக்கிய அப்டேட் கொடுத்த ஜடேஜா

ஹர்பஜன் சிங்கின் இந்த கேள்விகள் அனைத்துமே சரியானவை என்றும் டி20 கிரிக்கெட்க்கு பொருந்தும் வீரர்களை அணியில் தேர்வு செய்து விளையாட வைத்துவிட்டு, பெரிய வீரர்களாக இருந்தாலும் சரி அவர்கள் சரிப்பட்டு வரவில்லை எனில் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்களும் சமூக வலைதளத்தின் மூலம் கொந்தளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement