அறுவைசிகிச்சை முடிந்த கையோடு இந்திய அணிக்கு திரும்புவது குறித்து – முக்கிய அப்டேட் கொடுத்த ஜடேஜா

Ravindra-Jadeja
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேளையில் அவருக்கு ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. பந்து வீசும் போது காலை அழுத்தி வைப்பதனால் இந்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால் அவர் ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறுகிறார் என்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்தது.

பின்னர் ஜடேஜாவிற்கு பதிலாக மாற்று வீரராக அக்சர் பட்டேல் ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இந்திய அணியில் இருந்து வெளியேறிய ஜடேஜா அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அதன் பின்னர் ஓய்வு எடுக்க இருப்பதினால் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரிலும் அவர் விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகியது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து வெளியேறிய ஜடேஜாவின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தற்போது ரவீந்திர ஜடேஜாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் சில புகைப்படங்களை வெளியிட்டு அவரது உடல்நிலை குறித்த அப்டேட்களை ரசிகர்களுக்காக வழங்கி உள்ளார்.

அதன்படி அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு பிறகு அமர்ந்திருக்கும் படியும், நிற்கும்படியும் சில புகைப்படங்களை பதிவிட்ட அவர் குறிப்பிடுகையில் : ஆபரேஷன் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. இந்திய அணியின் நிர்வாகத்திற்கும், நிர்வாகிகளுக்கும் எனது நன்றி என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் என்னுடன் விளையாடும் சக வீரர்கள், சப்போர்ட் ஸ்டாப்கள், பிசியோ, டாக்டர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. தற்போது நான் அறுவை சிகிச்சை முடித்துக் கொண்டு படிப்படியாக காயத்தில் இருந்து மீண்டு வருகிறேன். என்னால் முடிந்த அளவு எவ்வளவு சீக்கிரம் களத்திற்கு திரும்ப முடியுமோ அவ்வளவு விரைவாக திரும்புவேன்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2022 : கொஞ்சமும் திருந்தாத ரோஹித், மீண்டும் மீண்டும் அதே தவறுகள் – தோல்விக்கான காரணங்கள் இதோ

அனைவரது பிரார்த்தனைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என ரவீந்திர ஜடேஜா பதிவிட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக பார்க்கப்படும் ரவீந்திர ஜடேஜா ஒருவேளை டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறாமல் போகும் பட்சத்தில் இந்திய அணிக்கு அது ஒரு பெரிய இழப்பு என்றே கூற வேண்டும்.

Advertisement