ஆசிய கோப்பை 2022 : கொஞ்சமும் திருந்தாத ரோஹித், மீண்டும் மீண்டும் அதே தவறுகள் – தோல்விக்கான காரணங்கள் இதோ

India Rohit Sharma
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பையில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாகவும் நடப்பு சாம்பியனாகவும் களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய 8வது கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கு தகுந்தார்போல் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்டு வந்த இந்தியா இந்த ஆசிய கோப்பையிலும் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது.

IND vs SL

- Advertisement -

ஆனால் வழக்கம்போல அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் முக்கிய நேரங்களில் சொதப்பிய இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து இலங்கைக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியிலும் மண்ணைக் கவ்வியது. இதனால் ஆரம்பத்தில் எளிதாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா தற்போது பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வீட்டுக்கு கிளம்புவது 99% உறுதியாகிவிட்டது. இத்தனைக்கும் இலங்கையை விட அனுபவமும் தரமும் நிறைந்த சூப்பர் ஸ்டார்களை கொண்டிருந்த போதிலும் இந்த படுதோல்வியை சந்தித்துள்ளதால் இந்திய ரசிகர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

திருந்தாத ரோஹித்:
1. இந்த சூப்பர் 4 சுற்றில் சந்தித்த 2 போட்டிகளின் இறுதியில் பார்த்தால் வெற்றிக்கு 15 – 20 குறைவாக இருந்ததை அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அந்த முக்கிய ரன்களை எடுக்கும் திறமையை பெற்ற தினேஷ் கார்த்திக்கை நம்பாத கேப்டன் ரோகித் சர்மா இந்தத் தொடரில் அவர் வெறும் ஒரு பந்து மட்டுமே சந்தித்திருந்த நிலையில் அதிரடியாக நீக்கினார்.

DK and Pant

2. மறுபுறம் ஏற்கனவே 57 போட்டிகளில் விளையாடி இதுவரை மனதில் நிற்கும் அளவுக்கு எப்போதுமே டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படாத ரிஷப் பண்ட் பாகிஸ்தானுக்கு எதிராக வழக்கம்போல சொதப்பினார். அதனால் பாடத்தை கற்க வேண்டிய ரோகித் மீண்டும் இலங்கைக்கு எதிராக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யாமல் அதே தவறை மீண்டும் செய்தார்.

- Advertisement -

3. காயத்தால் வெளியேறிய ஜடேஜாவுக்கு பதில் தீபக் ஹூடாவை அணியில் சேர்த்த அவர் பாண்டியா, சஹால் போன்ற இதர முக்கிய பவுலர்கள் தடுமாறிய போது 2 சூப்பர் 4 போட்டிகளிலுமே ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை. ஒருவேளை சமீப காலங்களில் சிறப்பாக பந்துவீசி நல்ல பார்மில் இருக்கும் ஹூடாவின் திறமை மீது நம்பிக்கை இல்லையென்றால் எதற்காக அணியில் எடுக்க வேண்டும். ஒருவேளை வெறும் பேட்டிங் செய்வதற்காக மட்டும் தேர்வு செய்யப்பட்டிருந்தால் அவரை விட அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்கே விளையாடி இருக்கலாமே.

Deepak-Hooda

3. பொதுவாக டி20 கிரிக்கெட்டில் கடைசி ஓவருக்கு முந்தைய 19ஆவது ஓவர் முக்கியமானதாகும். அதில் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் பவுலரை பயன்படுத்தி குறைந்த ரன்களை கொடுத்தால் தான் கடைசி ஓவரை வீசுபவர் வெற்றிக்கு போராட முடியும்.

- Advertisement -

ஆனால் தற்சமயத்தில் அர்ஷிதீப் சிங் நல்ல டெத் பவுலராக இருக்கும் நிலையில் முதல் போட்டியில் ரோகித் வாய்ப்பு கொடுத்த புவனேஸ்வர் குமார் அனுபவத்தை மறந்து 19வது ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்ட போது ஒரே ஓவரில் 19 ரன்களை வாரி வழங்கினார்.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

அதனால் பாடத்தை கற்றிருக்க வேண்டிய ரோகித் சர்மா மீண்டும் இலங்கைக்கு எதிரான போட்டியில் அதே 19வது ஓவரை வீசுவதற்கு அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அதில் புவனேஷ்வர் குமார் மீண்டும் 21 ரன்கள் தேவைப்பட்ட போது 14 ரன்களை வாரி வழங்கி வெற்றியை தாரை வார்த்தார். ஆனால் 2021 டி20 உலகக் கோப்பைக்குப்பின் டெத் ஓவர்களில் புவனேஸ்வரை (10.08) விட அர்ஷிதீப் சிங் தான் (6.51) சிறந்த எக்கனாமியை கொண்டுள்ளார்.

- Advertisement -

4. இதுபோக குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்க தவறியதால் கடைசி சில ஓவர்களில் உள்வட்டத்துக்கு வெளியே பீல்டர்கள் குறைப்பு, அர்ஷிதீப் சிங் போன்ற இதர அணி வீரர்களிடம் கேப்டனாக கடுமையாக நடந்து கொண்டது போன்ற அம்சங்களிலும் ரோகித் சர்மா சொதப்பினார்.

Rohit Sharma Arshdeep Singh

தவறான தேர்வு:
இதுபோக துபாயில் நடைபெறும் இந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சு தான் அதிகம் எடுபடும் என்ற நிலைமையில் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்தால் விலகிய நிலையில் புவனேஸ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷிதீப் சிங் என 3 முழுநேர வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் தேர்வு செய்து தேர்வுக்குழு தவறு செய்தது.

ஏனெனில் ஆவேஷ் கான் ரன்களை வாரி வழங்கி நீக்கப்பட்ட போது அவருக்கு பதில் தேர்வு செய்ய தீபக் சஹர் போன்ற வேகப்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. மாறாக அவர் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் அளவுக்கு தேர்வுக்குழு சொதப்பலான தேர்வை நிகழ்த்தியது.

Deepak-Chahar

அதைவிட இப்போதுதான் காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை போய் ஆவேஷ் கானுக்கு பதில் 3வது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்தியது தேர்வுக்குழு, பயிற்சியாளர், கேப்டன், அணி நிர்வாகம் என அனைவரின் மொத்த சொதப்பலான முடிவை காட்டுகிறது.

Advertisement