அஷ்வினை பாக்கும்போதெல்லாம் எனக்கு இந்த வியப்பு எப்போதுமே இருக்கும் – ரோஹித் சர்மா புகழாரம்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி மொகாலி மைதானத்தில் கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி துவங்கி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேரத்தில் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக அமைந்ததால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ashwin 1

அதே வேளையில் இந்த போட்டியில் விளையாடிய தமிழக வீரரும், இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி இந்திய அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள் உடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் தற்போது இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது மூலம் கபில் தேவின் 434 விக்கெட்டுகளை கடந்து தற்போது 436 விக்கெட்டுகளுடன் அஸ்வின் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

மேலும் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவரை 85 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அஸ்வின் தற்போது 436 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளதால் இன்னும் குறைந்தது 50 போட்டிகளில் அவர் விளையாடும் பட்சத்தில் கிட்டத்தட்ட அவர் 700 விக்கெட்டுகளை கடந்து செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

ashwin 1

எனவே நிச்சயம் இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் இதேபோன்று தொடர்ச்சியான. சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என்று அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தமிழக வீரர் அஸ்வின் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. அதிலும் குறிப்பாக அஸ்வின் செயல்பாடு மிக திருப்தியாக அமைந்தது. அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போது இந்த சாதனையை அவர் செய்திருப்பது மிகப் பெரிய விஷயம். நான் அஸ்வினை நீண்ட ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் அவரை பார்க்கும்போது அவரிடம் முன்னேற்றம் இருப்பதை தொடர்ச்சியாக கண்டு வருகிறேன். அவரது இந்த முன்னேற்றம் எனக்கு வியப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க : ஷேன் வார்னே அன்று வைத்த பெயரை இன்று நிஜமாக்கி சாதித்த ரவீந்திர ஜடேஜா – சுவாரசிய பின்னணி

நிறைய வருடங்களாக வருடங்களாக இந்திய அணிக்காக அவர் தொடர்ச்சியான சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். மேலும் பல போட்டிகளில் அவர் வெற்றிக்கு காரணமாகவும் திகழ்ந்துள்ளார். என்னுடைய பார்வையில் அஸ்வின் எல்லா காலத்திலும் ஒரு சிறந்த வீரர் என ரோகித் சர்மா மனதார பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement