நம்ம ரோஹித்தா இது? ரிவர்ஸ் ஸ்வீப்பை அசால்ட்டாக ஆடி அசத்தல் – நீங்களே பாத்துட்டு சொல்லுங்க

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இரண்டு நாட்களின் முடிவில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. ஏனெனில் இந்த 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்களை குவிக்க இலங்கை அணி 109 ரன்களை மட்டுமே குவித்தது.

அதனை தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி தங்களது 2-வது இன்னிங்சில் 303 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்ய இலங்கை அணிக்கு 447 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணியானது ஒரு விக்கெட்டை இழந்து 28 ரன்கள் அடித்துள்ளது. இதன் காரணமாக இன்னும் வெற்றிக்கு 419 ரன்கள் இலங்கை அணிக்கு தேவை. அதோடு மூன்று நாட்களும் மீதி உள்ளது. நிச்சயம் இந்த இலக்கு இலங்கை அணியால் அடிக்க கூடிய சாத்தியமான இலக்கு கிடையாது. எனவே தற்போதே இந்திய அணியின் வெற்றி உறுதி என்று கூறலாம்.

இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி விளையாடும் போது நமது அணியின் கேப்டனும், அதிரடி துவக்க ஆட்டக்காரரான ரோகித் 79 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதோடு இந்த போட்டியில் அவர் அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

பொதுவாகவே அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மா புல் ஷாட் ஆடுவதிலும், கட் ஷார்ட் ஆடுவதிலும் கைதேர்ந்தவர். அவர் அப்படி விளையாடி நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால் அவர் ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற வித்தியாசமான ஷாட்டுகளை விளையாடி நாம் பெருமளவில் பார்த்தது கிடையாது.

இதையும் படிங்க : எவ்வளவு தான் அடிப்பீங்க ! 32 வருடங்களுக்கு பின் இலங்கைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை – பாவம் அவங்க

இந்நிலையில் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் ரோகித் ஒரு சில ஸ்வீப் ஷாட்டுகளையும் இன்று விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவரது இந்த வித்தியாசமான ஸ்வீப் ஷாட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement