- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்காக சுயநலமற்ற முடிவை எடுத்த ரோஹித்.. புதிய கீப்பர் சர்பராஸை முதுகில் அடித்த காரணம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதனுடைய முதல் போட்டியில் இந்தியா வென்று முன்னிலை வகிக்கும் நிலையில் இரண்டாவது போட்டி பகல் இரவாக நடைபெற உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் பயிற்சி போட்டி நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது.

மழையால் 2வது நாள் தாமதமாக துவங்கிய அந்த போட்டியில் இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழி நடத்தினார். அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா பிரதமர் அணி 240 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

- Advertisement -

ரோஹித்தின் முடிவு:

அதிகபட்சமாக துவக்க வீரர் ஷாம் கோன்ஸ்டஸ் 107 ரன்களும் ஹன்னோ ஜேக்கப் 61 ரன்களும் குவித்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குறிப்பாக முதல் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாததால் அவர்கள் துவக்க வீரர்களாக விளையாடினார்கள்.

அதில் 2வது இன்னிங்ஸில் அபாரமாக பேட்டிங் செய்த அந்த ஜோடி 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. ராகுல் 77 ரன்களும் ஜெய்ஸ்வால் 161 ரன்களும் குவித்து அசத்தினார்கள். இருப்பினும் 2வது போட்டியில் ரோகித் சர்மா வருவார் என்பதால் ராகுல் 3 அல்லது 5வது இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

சுயநலமற்ற முடிவு:

ஆனால் முதல் போட்டியில் ராகுல் – ஜெய்ஸ்வால் அபாரமாக பேட்டிங் செய்து நன்கு செட்டிலாகியுள்ளார்கள். அதனால் அவர்களை பிரிக்க வேண்டாம் என்று விரும்பும் ரோஹித் சர்மா அணியின் நலனுக்காக இப்போட்டியில் தாம் 5வது இடத்தில் விளையாடும் முடிவை எடுத்துள்ளார். அதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் 3 அல்லது 5வது இடத்திலேயே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 131/2 டூ 138/7.. கோன்ஸ்டஸ் அசத்தல்.. ராணா 6 பந்தில் 4 விக்கெட்.. ஆஸி பிரதமர் அணியை அரை நாளில் அவுட்டாக்கிய இந்தியா

அவருடைய முடிவை வீணடிக்காமல் இந்தப் போட்டியிலும் 75 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜெய்ஸ்வால் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். ராகுல் 26* ரன்கள் எடுத்து விளையாடும் நிலையில் மூன்றாவது இடத்தில் கில் பேட்டிங் செய்கிறார். முன்னதாக இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட சர்பராஸ் கான் ஒரு எளிமையான பந்தை கூட சரியாக பிடிக்கவில்லை. அதனால் அவரை விளையாட்டாக முதுகில் அடித்த ரோகித் சர்மா எக்ஸ்ட்ரா பவுன்ஸ் நிறைந்த ஆஸ்திரேலியாவில் கீப்பிங் செய்ய எங்கே நிற்க வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கினார்.

- Advertisement -