இந்தியா 25/3.. மாபெரும் வரலாற்று சாதனைப் போட்டியில் ஏமாற்றிய ரோஹித்.. சொதப்பிய கோலி

Virat Rohit Perth
- Advertisement -

ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19ஆம் தேதி துவங்குகிறது. அத்தொடரின் முதல் போட்டி மேற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெர்த் நகரில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்தியா அணிக்கு நித்திஷ் ரெட்டி அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றார். அதே போல நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நீண்ட மாதங்களுக்குப் பின் இந்தியாவுக்காக விளையாடினார்கள். இதையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா தன்னுடைய 500வது போட்டியில் களமிறங்கினார்.

- Advertisement -

மாபெரும் சாதனைப் போட்டி:

கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 67 டெஸ்ட், 274 ஒருநாள், 159 டி20 போட்டிகள் என மொத்தம் இந்தியாவுக்காக 500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் வாயிலாக சச்சின் டெண்டுல்கர் (664), விராட் கோலி (551), எம்எஸ் தோனி (535), ராகுல் டிராவிட் (504) ஆகியோருக்கு இந்தியாவுக்காக 500 போட்டிகளில் விளையாடிய 5வது வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.

அந்த சாதனைப் போட்டியில் ஆட்டத்தைத் துவங்கிய இந்திய அணிக்கு பவுண்டரியை அடித்த அவர் 8 (14) ரன்களில் ஹேசல்வுட் வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 8 பந்துகளை எதிர்கொண்டு ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்டானார். போதாகுறைக்கு மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த புதிய கேப்டன் சுப்மன் கில் 10 (18) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இந்தியா திணறல்:

அதனால் 25/3 என ஆரம்பத்திலேயே இந்தியா தடுமாறியது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் நங்கூரமாக விளையாட முயற்சித்த போது மழை வந்தது. அதனால் இப்பதிவிடும் போது 37/3 என இந்திய அணி ஆரம்பத்திலேயே திண்டாடி வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் ஓவர்கள் குறைத்து போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்திய அணிக்காக தியாகம் செய்த சுயநலமற்ற ரோஹித்.. கோலி இதை செய்ய தேவையில்ல.. பின்ச் பேட்டி

மொத்தத்தில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு பின் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கிய இப்போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் முதல் போட்டியிலேயே அவர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகி இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர். எனவே கடைசி 2 போட்டிகளிலாவது அவர்கள் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Advertisement