இந்திய அணிக்காக தியாகம் செய்த சுயநலமற்ற ரோஹித்.. கோலி இதை செய்ய தேவையில்ல.. பின்ச் பேட்டி

Aaron Finch
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19ஆம் தேதி துவங்கியது. அத்தொடரில் சுப்மன் கில் தலைமையில் விராட் கோலி, ரோஹித் சர்மா கடைசி முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் 2027 உலகக் கோப்பையில் அவர்கள் இந்தியாவுக்காக விளையாடுவார்களா என்பதும் சந்தேகமாக இருக்கிறது.

ஒருவேளை உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமெனில் அவர்கள் உள்ளூரில் விளையாடி தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்வது அவசியம் என்று பல முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே அனைத்தையும் நிரூபித்து விட்ட விராட், ரோஹித் தம்மைப் பொறுத்த வரை உள்ளூரில் விளையாடத் தேவையில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய சொந்த சாதனைகளைத் தியாகம் செய்த ரோஹித் இந்தியாவுக்காக 2 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

சுயநலமற்ற ரோஹித்:

இது பற்றி அவர் பேசுவது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவை பற்றிய சிறந்த விஷயம் என்னவெனில் கடந்த சில வருடங்களாக அவர் தன்னுடைய அணிக்காக தியாகம் மிகுந்த அணுகுமுறையை பின்பற்றினார். ஒரு அணியின் தலைவர் முன்னின்று தலைமைத் தாங்குவதை விட சிறந்த பலம் இருக்க முடியாது. என்னுடைய ரெக்கார்டை பாருங்கள், அதை வைத்து நான் விளையாட விரும்புகிறேன் என்று சொல்வது அவருக்கு எளிது”

“சிறந்த வீரரான அவர் நினைத்திருந்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை துரத்தியிருப்பார். ஆனால் உண்மையில் அவர் அணிக்காக முன்னின்று விளையாடுகிறேன் என்று சொன்னார். இந்த விளையாட்டு மாறியுள்ளதால் நான் முதல் 10 ஓவர்களை டாமினேட் செய்து அதிகமாக பயன்படுத்த விரும்புகிறேன் என்று அவர் சொன்னார். அதுவே கேப்டனாக அவருடைய பலமாகும். அது மாறாது என்பதில் எனக்கு சந்தேகமில்லை”

- Advertisement -

பின்ச் பாராட்டு:

“நீங்கள் உங்களுடைய ஆட்டத்தை எப்படி விளையாட வேண்டும் என்று வரையறுக்கும் போது நாளடைவில் உங்களுடைய அணியும் அந்த அணுகுமுறைக்கு மாறும் நேரம் வரும். அதற்காக ரோஹித் தனது சொந்த சாதனைகளை இந்திய கிரிக்கெட்டுக்காக தியாகம் செய்வதைப் பார்ப்பது அற்புதமானது. அதனாலேயே ரோஹித் சுயநலமற்ற தலைவர்”

இதையும் படிங்க: ஃபிட்னெஸ் சாட்சிய கண்ணுல பாத்த அப்றமும் இப்படி பேசலாமா? அஜித் அகர்கருக்கு ஷமி பதிலடி

“அப்படிப்பட்ட அவர் அடுத்த 12 மாதங்கள் சுப்மன் கில்லுக்கு உதவியாக இந்திய அணியின் தலைமைப் பொறுப்பில் இருப்பார் என்று நான் நம்புகிறேன். 2027 உலகக் கோப்பையில் விளையாட விராட், ரோஹித் போதுமான பந்துகளை எதிர்கொள்ள வேண்டும். அதற்காக அவர்கள் நிறைய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நான் கருதவில்லை. ஏனெனில் அது அவர்களது வாய்ப்பு அல்லது அணுகுமுறையை மாற்றப் போவதில்லை” என்று கூறினார்.

Advertisement