இதை செய்தால் தவிர ரோஹித் சர்மாவுக்கு 2027 உ.கோ சான்ஸ் கேரண்டி கிடையாது.. ஆகாஷ் சோப்ரா பேட்டி

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளது பல ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா 11 தொடர் வெற்றிக்களுடன் இறுதிப்போட்டி வரை சென்று அசத்தியது.

2024 டி20 உலகக்கோப்பையை ரோஹித் தலைமையில் வென்ற இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராஃபியையும் வென்று சாதனை படைத்தது. அதனால் 2027 உலகக்கோப்பை வரை ரோஹித் சர்மா இந்தியாவின் கேப்டனாக விளையாடுவார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. சொல்லப்போனால் 2027 உலகக்கோப்பை வெல்வது தம்முடைய கனவு என்று ரோஹித் சர்மாவும் சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

கேரண்டி கிடையாது:

இருப்பினும் அப்போது 40 வயதில் அவரால் ஃபிட்டாக நல்ல ஃபார்மில் அசத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகும். எனவே இப்போதே அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அதன் காரணமாக 2027 உலகக்கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக விளையாடும் ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா அரை சதம், சதம் போன்ற பெரிய ரன்கள் அடித்தால் மட்டுமே உலகக் கோப்பையில் விளையாட முடியும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இல்லையெனில் வாய்ப்பில்லை என்பதே தற்போதைய அறிவிப்பு உணர்த்துவதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

2027 உலகக் கோப்பை வாய்ப்பு:

“கில் இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டன். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக இருக்கும் அவர் டி20 கிரிக்கெட்டில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து ஆல் ஃபார்மட் கேப்டனை தேடும் இந்தியா அதற்கான ஒப்பந்தத்தை போட்டுள்ளதாக தெரிகிறது. 2027 உலகக்கோப்பைக்கு தயாராகும் இந்தியாவுக்கு கில் கேப்டனாக இருப்பார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்று இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்”

இதையும் படிங்க: இந்தியாவிடம் மாஸ் காட்டிட்டீங்க.. பாகிஸ்தான் வீரருக்கு ஹீரோ வரவேற்பு.. புதிய ஸ்டிக்கரும் வெளியீடு

“கேப்டனாக இருக்கும் போது அணித் தாளில் உங்களுடைய பெயர் முதலாவதாக இருக்கும். ஆனால் சாதாரண வீரராக இருக்கும் போது உங்களுடைய தேர்வுக்கான சூழல் சோதிக்கப்படும். உங்களிடம் அனுபவம் இருந்தாலும் உங்களுடைய ஃபார்ம் எப்படி இருக்கிறது? என்பது சோதிக்கப்படும். உண்மை என்னவெனில் நீங்கள் கேப்டனாக இல்லையெனில் 2027 உலகக்கோப்பையில் விளையாடிவீர்கள் என்று எந்த கேரண்டியும் கிடையாது. தொடர்ந்து ரன்கள் அடிப்பது மட்டுமே உங்களுடைய வாய்ப்பு. அங்கே வறட்சி ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது” என்று கூறினார்.

Advertisement