ஐபிஎல் கிடையாது.. எனது கேரியரின் மறக்க முடியாத டாப் 3 வெற்றிகள் இது தான்.. ரோஹித் வெளியிட்ட லிஸ்ட்

Rohit Sharma 4
- Advertisement -

மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா கடந்த 17 வருடங்களாக சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். கடந்த 2007இல் அறிமுகமான அவர் 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் முக்கிய ரன்கள் அடித்து தோனி தலைமையில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். ஆனாலும் அந்த காலகட்டங்களில் மிடில் ஆர்டரில் விளையாடிய அவர் தடுமாறிக் கொண்டிருந்தார்.

அதை கவனித்து வந்த தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மா சர்மாவை துவக்க வீரராக களமிறக்கினார். அதை இறுக்கமாக பிடித்துக்கொண்ட ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், அதிகபட்ச ஸ்கோர் (264), ஒரே உலகக் கோப்பையில் (2019) 5 சதங்கள் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்து இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

டாப் 3 வெற்றிகள்:
அதற்கிடையே ஐபிஎல் தொடரில் தோனிக்கு முன்பாகவே 5 கோப்பைகளை வென்ற காரணத்தால் இந்தியாவின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு ரோஹித்துக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பில் 2023 உலகக் கோப்பையில் அவருடைய தலைமையில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா ஃபைனலில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அதற்காக மனம் தளராத அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றினார்.

அந்த அணுகுமுறையை பின்பற்றிய இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இந்நிலையில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதை விட தம்முடைய கேரியரில் 2024 டி20 உலகக்கோப்பை வென்றது மறக்க முடியாத டாப் தருணம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அத்துடன் 2007 டி20 உலகக் கோப்பை, ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 2008 முத்தரப்பு சிபி கோப்பைகளை வென்றதும் மறக்காத முடியாத வெற்றிகள் என ரோஹித் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனது கேரியர் 17 வருடங்கள். இந்த 17 வருடங்களில் முதல் வருடத்திலிருந்து இப்போது வரை நான் சில ஸ்பெஷலான தருணங்களை சந்தித்தேன். அந்த ஒவ்வொரு தருணங்களையும் நான் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன். குறிப்பாக முதல் வருடத்திலேயே 2007 டி20 உலகக் கோப்பை வென்றேன்”

இதையும் படிங்க: 108 ரன்ஸ்.. மந்தனா அசத்தல்.. பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. ஷபாலி வர்மா ஆல் டைம் வரலாற்று சாதனை

“அதற்கடுத்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அங்கே நடைபெற்ற சிபி தொடரை வென்றோம். அங்கிருந்து சில நல்ல விஷயங்களை சந்தித்த நான் பள்ளங்களையும் பார்த்தேன். ஆனால் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை இப்படித் தான் மேடு பள்ளமாக இருக்கும். ஆனால் இந்த 17 வருடங்களில் நான் சந்தித்த உச்சங்களை போற்றுகிறேன். அவை அனைத்தையும் விட 2024 டி20 உலகக் கோப்பை மறக்க முடியாத டாப் வெற்றியாகும்” என்று கூறினார்.

Advertisement