இவரையா கழற்றி விட பாக்குறீங்க பிசிசிஐ? பாபர் அசாமை முந்தி 38 வயதில் சாதித்த ரோஹித் சர்மா

Roht Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட், டி20 போட்டிகளில் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்கள். இனிமேல் அவர்கள் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார்கள். 2027 உலகக் கோப்பையே அவர்கள் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இதற்கிடையே இந்திய அணியின் தேர்வுக் குழுவினர் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 36 – 37 வயதை கடந்துள்ள அவர்களால் 2027இல் நல்ல ஃபார்மில் நல்ல உடல் தகுதியுடன் விளையாட முடியுமா என்பது கேள்விக்குறியாகும். எனவே இப்போதே புதிய இளம் அணியை உருவாக்கி 2027 உலகக் கோப்பையை வெல்ல தேர்வுக்குழு விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இவரையே கழற்றி விடுறீங்க:

அதனால் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் அவர்களை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் காணப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான டாப் 10 பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாமை முந்தியுள்ள 38 வயதாகும் ரோஹித் சர்மா உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

குறிப்பாக ரோஹித் சர்மா 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் டாப் ஸ்கோர் அடித்து ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்தார். மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் நடைபெற்ற தொடரில் பாபர் அசாம் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் 751 புள்ளிகள் பெற்றுள்ள அவரை 3வது இடத்திற்கு தள்ளிய ரோகித் 756 புள்ளிகளுடன் 2வது இடத்த்துக்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

முன்னேறிய ரோஹித்:

அதைப் பார்க்கும் ரசிகர்கள் இவரையா பிசிசிஐ கழற்றி விட பார்க்கிறது? என்று அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மனாக ஜொலித்து வருகிறார். அதே போல நம்பிக்கை நாயகன் விராட் கோலியும் 736 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் 8வது இடத்தில் நீடித்து வருகிறார்.

இதையும் படிங்க: பருமனான சோம்பேறின்னு கிண்டலடிச்சதுக்கு.. 5 பந்தில் 19 ரன்ஸ் அடிச்சு அவரை பழி வாங்கினேன்.. லிவிங்ஸ்டன் பேட்டி

டாப் 10 பவுலர்கள் தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 2, ரவீந்திர ஜடேஜா 9வது இடங்களில் உள்ளார்கள். அதே போல டி20 போட்டிகளுக்கான டாப் 10 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதலிடத்தில் இருக்கிறார். திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தைப் பிடித்துள்ளார். சூரியகுமார் யாதவ் 6, ஜெய்ஸ்வால் 11வது இடங்களில் உள்ளார்கள். டாப் 10 பவுலர்கள் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி 4, ரவி பிஸ்னோய் 7, அர்ஷ்தீப் சிங் 9வது இடங்களில் உள்ளார்கள்.

Advertisement