
ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்து வெளியேறியது. இதன் காரணமாக தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர்கள் வலுவான கம்பேக்கை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை நடைபெற்ற முடிந்துள்ள 2025 ஐ.பி.எல் தொடரின் முதல் ஐந்து லீக் போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி நான்கு தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் பின்தங்கி உள்ளது.
இப்படி மோசமான நிலையில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியானது பிளே ஆப் சுற்றுக்கு எவ்வாறு தகுதிபெறும்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது இன்று ஏப்ரல் 13-ஆம் தேதி தங்களது ஆறாவது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக அருண் ஜேட்லி மைதானத்தில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இப்படி ஒரு மோசமான நிலையை சந்திக்க துவக்க வீரரான ரோஹித் சர்மா வெளிப்படுத்தி வரும் மோசமான ஆட்டமும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதிரடியான துவக்க கொடுக்க நினைத்து ரோகித் சர்மா தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவருவது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வேளையில் இன்றைய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலாவது அவர் சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்றைய போட்டியிலும் துவக்க வீரராக களமிறங்கிய அவர் 12 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 18 ரன்களில் மீண்டும் ஒருமுறை ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
இதையும் படிங்க : முதல் 6 ஓவரிலேயே நாங்க செய்ஞ்ச தப்பால் கோலியும், சால்ட்டும் மேட்ச்சை முடிச்சிட்டாங்க – சாம்சன் வருத்தம்
அவரது இந்த மோசமான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு சேர்த்துஅந்த அணியின் நிர்வாகத்தையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. ஏற்கனவே மும்பை அணியால் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்படும் அவர் இனியும் ஒரு சில ஆட்டங்களில் சொதப்பினால் கூட அவரை பிளேயிங் லெவனில் இருந்தே வெளியேற்ற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.