2024 ஃபைனலில் பீதியாகிட்டேன்.. விராட் மாதிரி அவர் இல்லனா ஸ்பெஷல் வெற்றி கிடைசுருக்காது.. ரோஹித் பேட்டி

Rohit Sharma
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலக கோப்பை வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது. ஏனெனில் தோனி தலைமையில் வென்ற 2013 சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பின் 2023 வரை இந்தியா அனைத்து ஐசிசி தொடர்களிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வந்தது. அந்த சூழ்நிலையில் ரோஹித் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது.

அத்தொடரில் ஆரம்பம் முதலே எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அப்போட்டியில் ரோஹித், ரிஷப் பண்ட், சூரியகுமார் ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டானதால் 34/3 என இந்தியா திணறியது. அப்போது ஜோடி சேர்ந்த விராட் கோலி, அக்சர் பட்டேல் ஆகியோர் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தினர்.

- Advertisement -

கேம் சேஞ்சர்:

அதில் விராட் கோலி 76 (59) ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்ற நிலையில் அக்சர் படேல் 47 (31) ரன்கள் அடித்து அசத்தினார். இறுதியில் சிவம் துபே 27 (16) ரன்களை அடித்து அசத்தினார். பௌலிங் துறையில் கைமீறிய வெற்றியை கடைசி நேரத்தில் பும்ரா, அர்ஷ்தீப், பாண்டியா ஆகியோர் சூரியகுமாரின் அற்புத கேட்ச்சால் பெற்றுக் கொடுத்தனர்.

இந்நிலையில் அப்போட்டியில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்ததால் தாம் பீதியடைந்ததாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அப்போது கோலியுடன் அசத்திய அக்சர் படேல் கேம் சேஞ்சராக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டதாக ரோகித் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் ஓவரிலேயே நீங்கள் 3 பவுண்டரிகள் அடித்தால் நன்றாக துவங்கியுள்ளீர்கள் என்று அர்த்தம்”

- Advertisement -

ரோஹித் பாராட்டு:

“அன்று இந்தியாவுக்காக நீண்ட வருடங்கள் விளையாடிய அனுபவம் உதவியது. விராட் கோலியும் அன்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சிந்தித்திருப்பார் என உறுதியாகச் சொல்வேன். கடந்த காலங்களைப் பற்றி கவலைப்படாத அவர் 3 விக்கெட்டுகள் விழுந்த போது அக்சருடன் சேர்ந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார்”

“ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்ததால் நான் பீதியடைந்தேன். ஏனெனில் கடந்த கால நினைவுகள் மீண்டும் வந்தன. அதே சமயம் எங்களுடைய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நான் மிகவும் நம்பினேன். அத்தொடரில் அதற்கு முன்பு பெரிய ரன்கள் குவிக்காத அவர்கள் முக்கிய நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார். அக்சர் பற்றி பலரும் பேசவில்லை. ஆனால் அது கேம் சேஞ்சர் ஆட்டமாகும். அந்த நேரத்தில் 47 (31) ரன்கள் அடித்தது முக்கியமானது”

இதையும் படிங்க: சாய் சுதர்சரன் நீக்கம்.. 3 ஆவது இடத்தில் கருண் நாயர்.. அப்போ 6 ஆவது இடத்தில் யார்? – விவரம் இதோ

“முழுவதுமாக விளையாட வேண்டிய வேலையை விராட் அபாரமாக செய்தார். பின்னர் துபே, பாண்டியாவும் தங்களுடைய பங்கை ஆற்றினார்கள். அந்த வெற்றி என்னுடைய கேரியரில் மிகவும் சிறந்த தருணமாகும். அதற்கு முந்தைய ஐசிசி தொடர்களில் வெற்றியை நெருங்கிய நாங்கள் இதயங்களை உடைக்கும் தோல்வியை சந்தித்தோம். அதனாலேயே அந்த வெற்றி ஸ்பெஷலானது. அதனாலேயே அனைத்து வீரர்களும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். அந்த வெற்றிக்காக நாங்கள் அறிவார்ந்த திட்டங்களை வகுத்தோம்” என்று கூறினார்.

Advertisement