கடந்த மாதம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னணி வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டு அவரது தலைமையின் கீழ் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது அறிவிக்கப்பட்டு தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரண்டாவது டெஸ்டில் ஏற்படவுள்ள மாற்றம் :
அந்த வகையில் நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய இந்திய அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தாலும் அந்த போட்டியில் தோல்வியை சந்தித்து தொடரின் ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்திருக்கிறது. இந்த போட்டியில் விராட் கோலியின் நான்காம் இடத்தில் விளையாடிய சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார்.
எனவே அவரே இனியும் தொடர்ந்து நான்காவது வரிசையில் பேட்டிங் செய்வார். அதனால் அந்த இடம் தற்போது ஒரு பாதுகாப்பான கையில் உள்ளது. அதேவேளையில் மூன்றாம் இடத்தில் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் இன்னிங்சில் டக் அவுட்டும், இரண்டாவது இன்னிங்சில் 30 ரன்களையும் குவித்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதோடு முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் காயத்தையும் சந்தித்திருந்தார்.
இதன் காரணமாக அடுத்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சாய் சுதர்சன் அப்படி இரண்டாவது போட்டியில் விளையாடாமல் போனால் அவரது இடத்தில் கருண் நாயர் விளையாடுவார் என்று தெரிகிறது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நாட்களாக வாய்ப்பு காத்திருக்கும் அவர் தற்போது பின் வரிசையில் களமிறங்குவதை, அவர் நிறைய பந்துகளை விளையாடும் திறனுடைய வீரர் என்பதனால் அவருக்கு இந்த டாப் ஆர்டர் வாய்ப்பு சரியாக இருக்கும் என்பதால் இந்து மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அப்படி அவர் மூன்றாவது இடத்தில் சாய் சுதர்சனுக்கு பதிலாக களமிறங்கும் பட்சத்தில் அவரது ஆறாவது இடத்தில் மற்றொரு ஆல் ரவுண்டான நிதீஷ் ரெட்டி களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயத்தின் போது அறிமுகமாகி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்து அசத்தி இருந்தார்.
இதையும் படிங்க : ஜஸ்ட் மிஸ்ஸான தோல்விக்கு கவலைப் படாதீங்க.. இதை வெச்சு கில் இந்தியா கலக்கப் போறாங்க.. கிரேக் சேப்பல்
இதன் காரணமாக இந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படி இரண்டாவது போட்டியில் நிதீஷ் ரெட்டி ஆடினால் பின்வரிசையில் பேட்டிங் செய்வது மட்டுமின்றி கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக அவரால் பந்து வீச்சிலும் கை கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



