- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இளம் இந்தியாவுக்கு அதை சொல்றது என் கடமை.. சீரிஸை தோத்தாலும் இது கிடைச்சுருக்கு.. ரோஹித் பேட்டி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அக்டோபர் 25ஆம் தேதி சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக மாட் ரென்ஷா 56, கேப்டன் மார்ஷ் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய இந்தியா 38.3 ஓவரில் 237/1 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு கேப்டன் கில் 24 ரன்னில் அவுட்டானாலும் ரோஹித் சர்மா சதத்தை அடித்து 121* ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

நாயகன் ரோஹித்:

அவருடன் கடந்த 2 போட்டிகளில் டக் அவுட்டான விராட் கோலி 74* ரன்களை அடித்து போட்டியை ஃபினிஷிங் செய்தார். அதனால் இத்தொடரில் இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்திக்கும் அவமானத்திலிருந்து தப்பியது. 8, 73, 121 என இத்தொடரில் அசத்திய ரோஹித் சர்மா ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.

இந்நிலையில் இத்தொடரில் இந்தியா தோற்றாலும் சுப்மன் கில் தலைமையிலான இளம் அணிக்கு நிறைய அனுபவப் பாடங்கள் கிடைத்ததாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அத்துடன் இளம் இந்திய வீரர்களுக்கு கற்றுக் கொடுப்பது தம்முடைய கடமை என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற சவாலையே நீங்கள் ஆஸ்திரேலியாவில் எதிர்பார்ப்பீர்கள்”

- Advertisement -

இது என் கடமை:

“இங்கே விளையாடுவது எளிது கிடையாது. நீங்கள் சூழ்நிலையைப் புரிந்து விளையாட வேண்டும். நீண்ட நாட்கள் விளையாடாததால் இங்கே வந்து நல்ல பயிற்சிகளை எடுத்தேன். நாங்கள் தொடரை வெல்லாவிட்டாலும் நிறைய நேர்மறையான விஷயங்களைப் பெற்றோம். இளைஞர்களுக்கு நிறைய பாடங்கள் கிடைத்தன. முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு நான் வந்த போது எனக்கு சீனியர்கள் உதவி செய்தனர். அதே வேலையை இப்போது செய்வது எங்களுடைய கடமை”

இதையும் படிங்க: இதைத்தான் எதிர்பார்த்தேன்.. ஒரு வழியா கடைசி போட்டியில் வெற்றி பெற்றது குறித்து – கேப்டன் கில் பேட்டி

“ஆஸ்திரேலியாவில் விளையாடுவது எளிது கிடையாது. எனவே எங்களுடைய இளம் வீரர்கள் திட்டங்களை உருவாக்க நாங்கள் அனுபவத்தைப் பகிர வேண்டும். இத்தனை வருடங்கள் விளையாடிய பின்பும் ஆஸ்திரேலியாவில் நான் அடிப்படைகளை பின்பற்றியே விளையாடினேன். பொதுவாக ஆஸ்திரேலியாவில் விளையாட விருப்பும் எனக்கு சிட்னி மைதானத்தில் நல்ல நினைவுகள் இருக்கிறது. இங்கே பிட்ச், மைதானம், ரசிகர்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. நான் செய்ய விரும்புவதை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -