விராட் கோலியை ராசியில்லாத சுமாரான 3வது இடத்தில் களமிறங்கியது ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்

Rohit Sharma 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் இந்தியா முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதி மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 46க்கு ஆல் அவுட்டானது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் இந்தியா தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.

அதற்கு மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது முக்கிய காரணமாக அமைந்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் விளையாடும் நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 180-3 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

ராசியற்ற 3வது இடம்:

டேவோன் கான்வே 91 ரன்கள் எடுத்த அந்த அணிக்கு களத்தில் டேரில் மிட்சேல் 14*, ரச்சின் 22* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இந்தப் போட்டியில் சுப்மன் கில் காயத்தை சந்தித்ததால் விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்கினார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலும் நான்காவது இடத்தில் மட்டுமே களமிறங்கி வெற்றிகரமாக விளையாடியுள்ள அவர் கடைசியாக 2016ஆம் ஆண்டு 3வது இடத்தில் களமிறங்கினார்.

மேலும் 3வது இடத்தில் தன்னுடைய கேரியரில் ஒரு முறை கூட அரை சதம் அடிக்காத அவர் 30க்கும் குறைவான சராசரியையே கொண்டுள்ளார். அப்படி இருந்தும் அவரை ராசியற்ற 3வது இடத்தில் களமிறக்கியது இந்தியாவின் சரவிற்கு மற்றொரு காரணமாக அமைந்தது. இந்நிலையில் விராட் கோலியை மூன்றாவது இடத்தில் களமிறக்கியதன் காரணம் பற்றி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்தது பின்வருமாறு.

- Advertisement -

ரோஹித் விளக்கம்:

“கேஎல் ராகுல் பேட்டிங் இடத்தை நாங்கள் அதிகமாக மாற்ற விரும்பவில்லை. 6வது இடத்தில் ஓரளவு நன்றாக விளையாடிய அவருக்கு அதே வேலையை கொடுக்க விரும்பினோம். அதே போல சர்பராஸ் கானுக்கும் அவருடைய இடத்தை வழங்கினோம். ஏனெனில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் புதிதாக விளையாடுகிறார். அதனால் விராட் கோலி நினைக்காத பொறுப்பை ஏற்றுக் கொள்ள விரும்பினார்”

இதையும் படிங்க: வேதனையா இருக்கு.. 46க்கு இந்தியா ஆல் அவுட்டாக இது தான் காரணம்.. கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி

“இதைப் பற்றி நாங்கள் ஆரம்பத்திலேயே விவாதிப்போம். விராட் கோலி அங்கே விளையாடுவதில் சிக்கல் இல்லை என்று சொன்னார். அப்படி மூத்த வீரர்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடுவது வெற்றிக்கான நல்ல அறிகுறியாகும்” என்று கூறினார். இந்த நிலையில் இபபோட்டியில் கடுமையாக போராடி நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்துமா அல்லது குறைந்தபட்சம் டிரா செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement