வேதனையா இருக்கு.. 46க்கு இந்தியா ஆல் அவுட்டாக இது தான் காரணம்.. கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி

Rohit Sharma
- Advertisement -

நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் அக்டோபர் 16ஆம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20, ஜெய்ஸ்வால் 17 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

பின்னர் பேட்டிங் செய்யும் நியூஸிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 180-3 ரன்கள் எடுத்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. அந்த அணிக்கு டேவோன் கான்வே 91 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் டேரில் மிட்சேல் 14*, ரச்சின் 22* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக பெங்களூருவில் மழை பெய்ததால் தார் பாய் கொண்டு மூடப்பட்டிருந்த பிட்ச் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

46க்கு ஆல் அவுட்:

அப்படிப்பட்ட சூழ்நிலையில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற ரோஹித் சர்மா முதலில் பந்து வீசாமல் பேட்டிங் செய்தது 46க்கு ஆல் அவுட்டாக முக்கிய காரணமானது என்றே சொல்லலாம். இந்நிலையில் அதை ஒப்புக்கொண்டுள்ள ரோகித் சர்மா பிட்ச்சை தவறாக படித்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “46 என்ற ஸ்கோரை பார்த்து நான் வேதனையடைகிறேன்”

“முதலில் பேட்டிங் செய்தது கேப்டனாக என்னுடைய முடிவு தான். ஆனால் ஒரு வருடத்தில் ஓரிரு தவறான முடிவுகள் அமைவது பரவாயில்லை. பிட்ச்சில் புற்கள் இல்லை என்பதால் முதல் சில மணி நேரங்கள் மட்டுமே சவாலாக இருக்கும் என்று நினைத்தோம். பொதுவாகவே இந்தியாவில் முதல் மணி நேரம் கடினமானதாக இருக்கும். பின்னர் ஸ்பின்னர்கள் வருவார்கள்”

- Advertisement -

தவறான மதிப்பீடு:

“அதனாலேயே குல்தீப் யாதவை இந்த ஃபிளாட்டான பிட்ச்சில் கொண்டு வந்தோம். இதை விட பிட்ச் பிளாட்டாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இருப்பினும் அது தவறான மதிப்பீடு. நான் அதை சரியாக படிக்கவில்லை. அதனாலேயே நாங்கள் இந்த சூழலில் இருக்கிறோம். வேகத்துக்கு சாதகம் இருந்தது. எனவே அதற்கு திட்டங்களை வகுப்பது அவசியம்”

இதையும் படிங்க: அந்த ஐபிஎல் அணியில் விளையாடியது தான்.. இந்தியாவை சாய்க்க உதவுச்சு.. 5 விக்கெட் எடுத்த ஹென்றி பேட்டி

“இது போன்ற ஆடுகளங்களில் இதற்கு முன் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளோம். இருப்பினும் சில நேரங்களில் உங்களால் திட்டங்களை செயல்படுத்த முடியாது. அதனால் எங்களுக்கு மோசமான நாளாக அமைந்தது. ஆனால் இது போன்ற போட்டிகளில் அங்கமாக நாங்கள் இருந்துள்ளோம். எனவே இது எங்களுக்கு நாங்களே சவால் கொடுத்துக் கொள்ளும் ஒரு சூழ்நிலையாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement