இது இல்லனா போதும்.. உலக முழுவதும் இந்திய அணியில் சுந்தருக்கு வாய்ப்பு கொடுப்போம்.. ரோஹித் பாராட்டு

rohit sharma sundar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் விளையாடி இந்தியா 295 ரன்கள் வித்யாசத்தில் வென்று முன்னிலை பெற்றுள்ளது. இதை அடுத்து நவம்பர் 6ஆம் தேதி துவங்கும் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி காணும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.

முன்னதாக முதல் போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை தேர்ந்தெடுக்காத இந்திய அணி வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்தது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் 855 விக்கெட்டுகளை ஜோடியாக எடுத்துள்ள அவர்கள் ஐசிசி தரவரிசையில் உலகின் டாப் இரண்டு டெஸ்ட் ஆல் ரவுண்டர்களாக இருக்கிறார்கள். இருப்பினும் வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் ஒரு ஸ்பின்னர் மட்டுமே அணிக்கு தேவைப்படும்.

- Advertisement -

சுந்தருக்கு வாய்ப்பு:

அதனால் கடந்த நியூசிலாந்து தொடரில் அசத்திய சுந்தரை தேர்ந்தெடுத்த இந்திய அணி வெற்றியும் கண்டது. இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் உலகின் அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் அசத்துவதற்கான திறமையை கொண்டுள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். எனவே காயத்தை மட்டும் சந்திக்காமல் இருந்தால் சுந்தருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுப்போம் என்றும் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுந்தர் மிகவும் திடமான ஆல் ரவுண்டர். அவரால் பேட்டிங், பவுலிங்கில் என்ன செய்ய முடியும் என்பதை நாம் பார்த்துள்ளோம். உலகின் எந்தப் பகுதியிலும் விளையாடுவதற்கான திடமான டெக்னிக் அவரிடம் இருக்கிறது. அவரைப் போன்ற வீரர் உங்களுடைய அணியில் இருக்கும் போது உங்களுக்கான தன்னம்பிக்கை அதிகரிக்கும்”

- Advertisement -

ரோஹித் ஆதரவு:

“இங்கே அவர் காயத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் அவரைப் போன்ற வீரர் காயத்தை சந்திக்கவில்லையெனில் எங்களுடைய அணியில் எப்போதும் மதிப்பை ஏற்படுத்துபவராக இருப்பார். அவர் பேட்டிங் வரிசையில் நாங்கள் விரும்பக்கூடிய ஆழத்தை ஏற்படுத்தும் தன்னம்பிக்கையை கொண்டவர். அவருடைய கேரியர் இங்கிருந்து மேலே செல்வதை நான்”

இதையும் படிங்க: ரோஹித் அதிரடியான பயமளிக்கும் முடிவை எடுத்துருக்காரு.. இது ஆஸிக்கு டேஞ்சர்.. மைக்கேல் கிளார்க், பின்ச்

“காயத்தை சந்திக்காத வரை அவர் கீழே வரமாட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் அசத்துவதற்கு தேவையான அனைத்து திறன்களும் அவரிடம் இருக்கிறது. தனக்கு தேவையானவற்றை அவர் கொண்டுள்ளார்” என்று கூறினார். அந்த வகையில் அஸ்வின் 38 வயதை கடந்து விட்டதால் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெறுவார் என்று நம்பப்படுகிறது. அவருக்கு பதிலாக மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய கேப்டனே இப்படி ஆதரவு கொடுப்பதை பார்ப்பது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது.

Advertisement