இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது. முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த 10 போட்டிகளுக்கு மேலாக அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக விளையாடி வந்தார்.
அதனால் இந்திய அணியின் தோல்விகளுக்கும் காரணமாக அமைந்த அவரை ஓய்வு பெறுமாறு ஒரு தரப்பினர் விமர்சித்தார்கள். இருப்பினும் தமக்குப் பிடித்த ஒருநாள் கிரிக்கெட்டில் கட்டாக் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 119 ரன்கள் விளாசிய ரோஹித் ஃபார்முக்கு வந்து தன்னுடைய தரத்தை நிரூபித்தார். இந்நிலையில் 10 வருடங்களுக்கும் மேலாக விளையாடி நிறைய சதங்கள் மற்றும் ரன்கள் குவித்துள்ள தமக்கு மீண்டும் அசத்துவதற்குத் தேவையான விஷயங்கள் தெரியும் என்று ரோஹித் கூறியுள்ளார்.
அனுபவம் போதும்:
எனவே இது போல சதத்தை அடித்தால் தான் ஃபார்மில் இருக்கிறேன் என்று தாம் கருதுவதில்லை எனவும் ரோகித் தெரிவித்துள்ளார். அதை அறியாமல் தம்மை விமர்சித்தவர்கள் பற்றி ரோகித் பேசியது பின்வருமாறு. “இதைத்தான் நான் பேசி வருகிறேன். நீங்கள் நீண்ட காலம் விளையாடி ரன்கள் குவித்தால் உங்களிடம் ஏதோ இருக்கிறது என்று அர்த்தம்”
“நீண்ட காலம் இந்த விளையாட்டில் விளையாடும் நான் என்னிடம் என்ன தேவைப்படும்? என்பதைப் புரிந்து வைத்துள்ளேன். இவை அனைத்தும் களத்திற்கு சென்று நீங்கள் உங்களுடைய விஷயங்களை செய்வதைப் பற்றியதாகும். அந்த வகையில் இன்று என்னுடைய விஷயங்களில் ஒன்றைச் செய்தேன். எனது மனதில் நான் விளையாடும் வழியில் விளையாட முயற்சிக்கிறேன்”
தெளிவான மனநிலை:
“ஏற்கனவே சொன்னது போல அதன் காரணமாக ஓரிரு இன்னிங்ஸ் என்னுடைய மனதை மாற்றாது. இது எங்களுடைய அலுவலகத்தில் மற்றுமொரு சாதாரண நாள். களத்திற்கு சென்று விளையாட்டை விளையாடுவது எங்களுடைய வேலை. அதில் தூங்குவதற்கு முன்பாக நீங்கள் உங்களுடைய சிறந்த செயல்பாட்டைக் கொடுத்துள்ளீர்கள் என்பது உங்களுக்கு தெரிவது முக்கியம்”
இதையும் படிங்க: உயர்தரமான ரோஹித்தை பாத்து இதை இந்தியா – இங்கிலாந்து வீரர்கள் கத்துக்கலாம்.. பட்லர் மனதார பாராட்டு
“ஒவ்வொரு முறையும் களத்திற்கு செல்லும் போது நான் சிறப்பாக விளையாடவே விரும்புகிறேன் முயற்சிக்கிறேன். சில நேரங்களில் அது நடக்கும் சில நேரங்களில் நடக்காது. அந்தத் தெளிவு தான் எனக்கு முக்கியமானது. நீங்கள் இவ்வளவு ரன்கள் அடித்த போது ஏதோ சரியாக செய்துள்ளீர்கள் என்று அர்த்தமல்லவா? அதற்கு நீங்கள் மீண்டும் வரவேண்டும் அவ்வளவு தான். அது சொல்வதற்கு எளிது என்றாலும் செய்வது கொஞ்சம் கடினம். என்னுடைய மனதில் மகிழ்ச்சியுடன் நம் போட்டியை விளையாட வேண்டும். வேறு எதுவுமில்லை” என்று கூறினார்.



