இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் செடேஸ்வர் புஜாரா 2010 – 2023 வரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதில் 7000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த தொடர்களை இந்தியா வென்று சரித்திரம் படைக்க அவர் முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது.
முன்னதாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் போல களத்தில் நங்கூரமாக விளையாடும் ஸ்டைலைக் கொண்டிருந்த புஜாரா நிறைய பந்துகளை எதிர்கொண்டு ரன்களை குவிக்கும் அணுகுமுறையை பின்பற்றினார். அதனால் பெரும்பாலான சமயங்களில் மிகவும் மெதுவாக விளையாடக்கூடிய அவருக்கு எதிராக பவுலிங் செய்வதை ஜோஸ் ஹேசல்வுட் போன்ற நிறைய வெளிநாட்டு பவுலர்கள் வெறுப்பார்கள் என்றே சொல்லலாம்.
அரிதான சிக்ஸர்:
அப்படிப்பட்ட புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்சர் அடிப்பதெல்லாம் அபூர்வமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படிப்பட்ட அவரையும் கடந்த 2023 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா சிக்ஸர் அடிக்க வைத்தார். அந்தத் தொடரில் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் இந்தியாவை 109க்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 197 ரன்கள் அடித்தது.
அடுத்த விளையாடிய இந்தியாவுக்கு ரோஹித், கோலி உள்ளிட்ட மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். இருப்பினும் அப்போது நங்கூரத்தை போட்ட புஜாரா 50க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆமை வேகத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது தான் ஏதாவது செய்து வேகமாக ரன்களை அடியுங்கள் என்று புஜாராவுக்கு மெசேஜ் அனுப்பியதாக ரோகித் கூறியுள்ளார்.
நாதன் லயன் ஒர்த் இல்ல:
மறுபுறம் கேப்டனின் சொல்லைத் தட்டாத புஜாரா அரிதான சிக்ஸர் அடித்தது பெவிலியனில் அமர்ந்திருந்த ரோகித் உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. இது பற்றி புஜாரா புத்தக வெளியீட்டு விழாவில் ரோஹித் பேசியது பின்வருமாறு. “நாங்கள் நாதன் லயனை கொஞ்சம் அடித்து நொறுக்க விரும்பினோம். வேகமாக ரன்கள் குவிக்க விரும்பிய நாங்கள் டிக்ளேர் செய்யும் சூழ்நிலையில் இருந்தோம்”
இதையும் படிங்க: விராட் கோலியின் மீதுள்ள அன்பினால் 18 வருட பாரம்பரியத்தை உடைத்த ரஜத் பட்டிதார் – இந்த மனசு யாருக்கு வரும்?
“அதற்காக இப்போது எதையாவது மாற்றியாக வேண்டும் என்று நினைப்போம். அப்போது நாதன் லயன் மின்-ஆன் ஃபீல்டரை உள்ளே வைத்து பவுலிங் செய்தார். அதைப் பார்த்த நான் இந்த சூழ்நிலையில் அடிக்க முடியாமல் இருப்பதற்கு நாதன் லயன் அவ்வளவு ஒர்த்தான பவுலர் இல்லையெறு கருதினேன். அந்த பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தாலும் நாங்கள் வேகமாக ரன்கள் குவிக்க விரும்பினோம். அதனால் புஜராவிடம் அதை சொல்லுமாறு நான் இஷான் கிஷனை அனுப்பினேன்” எனக் கூறினார்.



