IND vs AUS : ஆடுறது முன்னாள் வீரர்களா? பாகிஸ்தான்ல போய் பாருங்க – பிட்ச் விமர்சனங்களுக்கு ரோஹித் சர்மா கொடுத்த பதிலடி

Rohith-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் ஆரம்பத்திலேயே கோப்பையை தக்க வைத்தது. அந்த நிலையில் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் மிரட்டலாக செயல்பட்ட ஆஸ்திரேலியா குறிப்பாக பந்து வீச்சில் இந்தியாவை 109, 163 ரன்களுக்கு சுருட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தக்க பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

அதனால் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தையும் காப்பாற்றிக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. முன்னதாக இப்போட்டியில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உணர்ந்த கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஆனால் நாக்பூர் மற்றும் டெல்லி ஆகிய மைதானங்களை விட முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே 4.8 டிகிரி எதிர்பாராத அளவுக்கு தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் தாக்கு பிடிக்க முடியாத ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

ரோஹித் ஆதரவு:
மேலும் என்ன தான் இந்தியாவில் சுழல் இயற்கையாகவே இருக்கும் என்றாலும் முதல் நாளிலேயே சுழன்ற இப்போட்டியும் முதலிரண்டு போட்டிகளை போலவே 3 நாட்களுக்குள் முடிந்துள்ளது நிறைய ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. அதனால் மீண்டும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவ்வாறு விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள் இந்த பிட்ச்களில் விளையாடப் போவதில்லை நாங்கள் தானே விளையாட போகிறோம் என்று கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் 5 நாட்கள் நடைபெறும் போட்டிகள் அழுப்பு தட்டுவதாக ரசிகர்கள் தெரிவிக்கும் நிலையில் 3 நாட்களில் டெஸ்ட் போட்டி முடிவது அனைவரையும் கவரக்கூடியதாக இருப்பதாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா இது பற்றி போட்டி முடிந்த பின் பேசியது பினவருமாறு.

IND vs AUS Indore Pitch

“இது போன்ற பிட்ச்களில் விளையாடுவது எங்களுடைய முடிவாகும். அதற்காக நாங்கள் பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை போடுகிறோம் என்று நினைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் நாங்கள் வெல்லும் போது எங்களுடைய பேட்டிங் பற்றி யாரும் கேட்பதில்லை. தோற்கும் போது தான் இந்த கேள்விகள் வருகின்றன. நாங்கள் தான் இது மாதிரியான பிட்ச்களில் விளையாட முடிவெடுக்கிறோம். அதனால் எங்களுக்கும் சவால் வரும் என்பதை தெரிந்து நாங்களும் தயாராக இருக்கிறோம். உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்தியாவில் நாங்கள் விளையாடும் போது இங்குள்ள பிட்ச் பற்றி அதிகமான பேச்சுக்களும் கவனங்களும் காணப்படுகின்றன”

- Advertisement -

“ஆனால் அது தேவையில்லை என்று நினைக்கிறேன். இதை விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள் இது போன்ற பிட்ச்களில் விளையாடியுள்ளார்களா என்பது பற்றி எனக்கு தெரியாது. இருப்பினும் இது போன்ற பிட்ச்களில் தான் நாங்கள் விளையாட விரும்புகிறோம். அது தான் எங்களுடைய பலமாகும். குறிப்பாக சொந்த மண்ணில் விளையாடும் போது நீங்கள் யார் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பதை பற்றி கவலைப்படாமல் உங்களது பலத்திற்கேற்றார் போல் விளையாட வேண்டும். எங்களுடைய பலம் ஸ்பின் பவுலிங் மற்றும் பேட்டிங் ஆழமாகும்”

Rohit-Sharma

“வெளிநாடுகளில் அந்தந்த அணிகள் தங்களது சொந்த மண் சூழ்நிலையை பயன்படுத்தும் போது நாங்கள் பயன்படுத்துவதில் என்ன தவறு? ஒருவேளை இதில் வெற்றி பெற முடியாமல் போனால் நீங்கள் சொல்வதை பற்றி யோசிக்கலாம். டெஸ்ட் போட்டிகள் 5 நாட்களும் நடைபெற இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாட வேண்டும். ஆனால் இந்தியாவுக்கு வெளியேயும் 5 நாட்கள் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதில்லை”

இதையும் படிங்க: IND vs AUS : 2017க்குப்பின் பிசிசிஐக்கு சவுக்கடி – தாறுமாறாக சுழன்ற இந்தூர் பிட்ச்சுக்கு ஐசிசி கொடுத்த பெரிய தண்டனை இதோ

“நேற்று கூட தென்னாப்பிரிக்காவில் 3 நாட்களில் முடிந்தது. பாகிஸ்தானில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் அலுப்பு தட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே உங்களை நாங்கள் சுவாரசியமாக்கவே இப்படி விளையாடுகிறோம்” என்று கூறினார். இருப்பினும் இந்தூர் பிட்ச் மோசமாக இருந்ததாக அறிவித்து அதற்கு 3 கருப்பு புள்ளிகளை ஐசிசி தண்டனையாக அறிவித்துள்ளது ரோகித் சர்மாவின் இந்த கருத்துக்களை நியாயப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement