எங்கள பாத்தா முட்டாள் மாதிரி தெரியுதா? அவரால மட்டும் ஒத்த கைல உ.கோ வாங்கி கொடுக்க முடியாது – ரோஹித் கோபம், காரணம் இதோ

Rohit Sharma India
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தாமதத்திற்கு பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கான வீரர்கள் இத்தொடரிலிருந்து தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நிலைமையில் அறிவிக்கப்பட்ட இந்த அணி அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் வெளியிட்ட இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து தேர்வாகியுள்ளது ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.

Asia-Cup

- Advertisement -

மேலும் இந்த அணியில் விராட் கோலி, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷமி, சிராஜ், பும்ரா, தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சுமாராக செயல்பட்டும் சூரியகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும் சஞ்சு சாம்சன் பேக்-அப் வீரராக மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் சில ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தையும் விட நம்பர் 4வது இடத்தில் விளையாடுவார் என்று கருதப்படும் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்ததால் அந்த இடத்தில் விளையாடப் போவது யார் என்ற விவாதம் சில வாரங்களாகவே உச்சகட்டமாக பேசப்பட்டு வந்தது.

ரோஹித் சர்மாவின் பதில்:
அதில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகமாகி 20 வயதிலே முதிர்ச்சியான செயல்பாடுகளை வெளிப்படுத்திய திலக் வர்மாவை தேர்வு செய்து அந்த பிரச்சனையையும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத குறையையும் தீர்க்கலாம் என்று நிறைய கருத்துக்கள் காணப்பட்டன. அதற்கேற்றார் போல் தற்போது குணமடைந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயருடன் திலக் வர்மாவும் தேர்வாகியுள்ள நிலையில் 4வது இடத்தில் உலகக்கோப்பையில் விளையாடப் போவது யார் என்ற கேள்வியை ரோகித் சர்மாவிடம் செய்தியாளர்கள் எழுப்பினர்.

KL rahul Shreyas Iyer

அதற்கு 4வது இடத்தில் விளையாடுபவர் மட்டும் வெற்றியை பெற்றுத்தர மாட்டார் என்று கோபமாக பதிலளித்த ரோஹித் சர்மா நீங்கள் சொல்வது போல் டாப் ஆர்டரில் விளையாடுபவரை 8வது (4வது) இடத்தில் விளையாட வைப்பது போன்ற முட்டாள்தனமான வேலையை நாங்கள் செய்ய மாட்டோம் என கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதை நான் சரியாக விளக்குகிறேன். ஏனெனில் இதை புரிந்து கொள்வது அவசியமாகும். அதாவது அணியில் வளைவுத்தன்மை முக்கியம் என்று நான் சொல்வது ஒரு ஓப்பனிங் வீரரை 7வது இடத்திலோ அல்லது ஹர்திக் பாண்டியா துவக்க வீரராகவோ களமிறங்குவார் என்று அர்த்தமல்ல”

- Advertisement -

“இங்கே ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் கடந்த 7 – 8 வருடங்களாக துவக்க வீரர்களாகவே விளையாடினார்கள். விராட் கோலி 3வது இடத்தில் விளையாடினார். அதைத்தொடர்ந்து 4, 5வது இடத்தில் விளையாடுவதற்கு வந்துள்ள புதிய வீரர்கள் மேல் அல்லது கீழ் வரிசையில் பேட் செய்கிறார்களா என்பதை பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும். மேலும் கடந்த 4 – 5 வருடங்களில் துவக்க வீரர்கள் தாங்கள் விளையாடும் இடத்திலேயே விளையாடி வருகிறார்கள். 3வது இடத்தில் விளையாடுபவர் அங்கேயும் 5வது இடத்தில் விளையாடிய கேஎல் ராகுல் மாற்றமின்றி அங்கே தான் விளையாடுகிறார்கள்”

Rohit-Sharma

“அதே போல ஜடேஜா, பாண்டியா ஆகியோர் 6, 7 ஆகிய இடங்களில் விளையாடுகின்றனர். எனவே சில நேரங்களில் 4, 5வது இடத்தில் விளையாடுபவர்கள் கீழே விளையாடினால் எந்த பிரச்சினையும் இல்லை. அது போன்ற வளைவுத்தன்மை தான் முக்கியமாகும். மேலும் 4வது இடத்தில் விளையாடுபரால் மட்டும் அனைத்தும் நிகழ்ந்து விடாது. ஏனெனில் இதே அணியில் டாப் 3 இடங்களிலும் 5, 6, 7 ஆகிய இடங்களிலும் இருப்பவர்களாலும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியும்”

இதையும் படிங்க:2023 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்? சிம்பிளாக சிரித்துக்கொண்டே பதிலளித்த – சவுரவ் கங்குலி

“அதனால் ஒரு இடத்தில் விளையாடுபவர் மட்டும் மொத்த தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுக்க முடியாது. மாறாக மொத்த பேட்டிங் வரிசையும் இணைந்து செயல்பட்டால் தான் வெற்றி காண முடியும். குறிப்பாக நீங்கள் செல்வது போல் ஓப்பனிங் வீரரை 8வது இடத்திலும் 8வது இடத்தில் விளையாடுபவரை டாப் ஆர்டரிலும் களமிறக்கும் முட்டாள்தனமான மாற்றங்களை நாங்கள் எப்போதும் செய்ய மாட்டோம்” என்று கூறினார்.

Advertisement