- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ரா விளையாடுவாரா? ரிஷப் பண்ட் – ராகுல் ஆகியோரில் விக்கெட் கீப்பர் யார்? கேப்டன் ரோஹித் பதில்

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூரில் துவங்குகிறது. ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி விளையாட உள்ளது.

அந்தத் தொடரில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்த ஜஸ்ப்ரித் பும்ரா தற்போது நீக்கப்பட்டுள்ளார். இந்திய பவுலிங் துறையின் முதுகெலுமாக கருதப்படும் அவர் சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்தார். அதிலிருந்து குணமடைந்து சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் தற்போது நீக்கப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கலக்கத்தையும் கொடுத்துள்ளது.

- Advertisement -

விலகும் பும்ரா:

ஏனெனில் பும்ரா இல்லையெனில் இந்தியா வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில் பும்ராவின் காயத்தைப் பற்றிய மருத்துவர்கள் அறிக்கைக்கு காத்திருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அதைப் பொறுத்து பும்ரா விளையாடுவார் என்றும் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

மேலும் ரிஷப் பண்ட்டை விட கடந்த உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ரோகித் மறைமுகமாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா விஷயத்தில் மருத்துவர்கள் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்”

- Advertisement -

கீப்பர் யார்:

“அது தெரிய வந்ததும் அவருடைய விஷயத்தில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது பற்றிய தெளிவான முடிவு கிடைக்கும். கடந்த சில வருடங்களாகவே கே.எல். ராகுல் எங்களுக்கு ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். கடந்த 10 – 15 ஒருநாள் போட்டிகளில் அவர் அணிக்கு தேவையான விஷயங்களை மிகச் சிறப்பாக செய்துள்ளார். ரிஷப் பண்ட்டும் அணியில் இருக்கிறார். எனவே அவர்கள் இருவரில் ஒருவரை விளையாடும் வாய்ப்பு எங்களுக்கு இருக்கிறது”

இதையும் படிங்க: இந்த உருட்டு பல வருஷமா இருக்கு.. ஹிட்மேன் ஃபார்ம், ஓய்வு பற்றிய தவறான கேள்விக்கு ரோஹித் கடுப்பான பதில்

“இருவருமே போட்டிகளை வென்று கொடுக்கக்கூடிய தன்மையைக் கொண்டவர்கள். எனவே அவர்களைக் கொண்டிருப்பதில் எங்களுக்கு நல்ல தலைவலி இருக்கிறது. அது போன்ற சூழ்நிலையில் கடந்த காலத்தில் நிகழ்ந்த நல்ல விஷயங்களை நாங்கள் தொடர பார்க்கிறோம். அதுவும் முக்கியமானது. அதனாலேயே ஒரு அணியாக நாங்கள் இங்கே நிற்கிறோம்” என்று கூறினார். இதிலிருந்து ராகுல் தான் விக்கெட் கீப்பராக விளையாட உள்ளது தெரிய வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -