- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதுக்காக கவலைப்படல.. 2வது போட்டியில் எங்க ஆட்டத்துல மாற்றத்தை பார்ப்பீங்க.. கேப்டன் ரோஹித் பேட்டி

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன. ஆனால் ஆகஸ்ட் இரண்டாம் தேதி துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றியை நழுவ விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 230/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்புறம் விராட் கோலி, கில், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்சர் படேல் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதே போல சிவம் துபே ஃபினிஷிங் செய்யத் தவறினார். கடைசியில் அர்ஷ்தீப் சிங் டக் அவுட்டாகி வெற்றியை கோட்டை விட்டது ரசிகர்களை கடுப்பாக்கியது.

- Advertisement -

ரோஹித் நம்பிக்கை:
அந்த சூழ்நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் நான்காம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு கொழும்பு நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மீண்டும் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மறுபுறம் முதல் போட்டியில் வெற்றி நழுவியும் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியில் எந்த மாற்றத்தையும் செய்யாத இந்திய அணியில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் தைரியமான முடிவை எடுத்தார்.

அத்துடன் முதல் போட்டியில் வெற்றியை நழுவி விட்டதற்காக இந்தியா கவலைப்படவில்லை என்றும் ரோஹித் தெரிவித்தார். மேலும் இந்தப் போட்டியில் சூழ்நிலையை அறிந்து சுதந்திரமாக விளையாடி இந்தியா வெற்றி பெறும் என்று அவர் உறுதியாக தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மீண்டும் நாங்கள் சேசிங் செய்வது பரவாயில்லை. சேசிங்கில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்”

- Advertisement -

“நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியான மனநிலையுடன் சென்று ஒரே மாதிரியாக விளையாட முடியாது. சூழ்நிலைக்கு தகுந்தார் போல் உங்களை உட்படுத்திக் கொண்டு சுதந்திரமாக விளையாட வேண்டும். அணியாக நாங்கள் மிகுந்த சுதந்திரத்துடன் விளையாடுவது மிகவும் முக்கியம். கடந்து போட்டியில் வெற்றியை நழுவி விட்டதற்காக நாங்கள் கவலைப்படவில்லை”

இதையும் படிங்க: 1998 நண்பர்கள் தின ஸ்பெஷல்.. சூதாட்டகாரர்களை பொய்யாக்கி உலக சாதனையுடன் இந்தியாவை ஜெயிக்க வைத்த சச்சின் – கங்குலி

“2 அணிகளும் நன்றாக விளையாடின. இருப்பினும் முடிவு சாதகமாக வரவில்லை” என்று கூறினார். அந்த வகையில் வெற்றி நழுவியதற்காக மாற்றம் செய்யாத இந்தியா அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்கியுள்ளது. மறுபுறம் இலங்கையில் காயமடைந்த சிராஜ், ஹஸரங்காவுக்கு பதிலாக ஜெப்ரி வாண்டர்செய், கமிண்டு மெண்டிஸ் விளையாடுவதற்கு தேர்வானார்கள்.

- Advertisement -