2019லயே அந்த பாடம் கத்துக்கிட்டேன்.. 500 ரன்ஸ் அடிக்காமையே 5 கோப்பை ஜெய்ச்சுருக்கோம்.. ரோஹித் பதிலடி

Rohit Sharma 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் 7 வெற்றி 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அந்த அணியின் இந்த வெற்றிகளுக்கு நம்பிக்கை நட்சத்திர முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்பியுள்ளது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மும்பை 5 கோப்பைகளை கேப்டனாக வெல்ல முக்கிய பங்காற்றிய ரோஹித் சர்மா தற்போது சாதாரண பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் இந்த வருடத்தின் ஆரம்பக்கட்ட போட்டிகளில் அவர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனால் ரோஹித் சர்மாவிடம் இருக்கும் திறமைக்கு 500 – 600 ரன்கள் அடிக்க வேண்டும் இல்லையேல் ஓய்வு பெற வேண்டும் என்று வீரேந்திர சேவாக், மனோஜ் திவாரி போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

ரோஹித் பதிலடி:

இருப்பினும் அதையெல்லாம் காதில் வாங்காத ரோகித் சர்மா தொடர்ந்து சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை பின்பற்றுகிறார். அந்த அணுகு முறையில் 76*, 70, 12, 53 என சமீபத்திய போட்டிகளில் பெரிய ரன்களை அடித்து வரும் ரோகித் சர்மா வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். இந்நிலையில் கோப்பை வெல்லாமல் 500 – 600 ரன்களை அடித்தால் அதில் என்ன பயன்? என்று விமர்சகர்களுக்கு ரோகித் பதிலடி கொடுத்துள்ளார்.

அந்தப் பாடத்தை 2019 உலகக்கோப்பையில் கற்றுக் கொண்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்ருமாறு. “ஒரு வருடத்தில் குறிப்பிட்ட ரன்கள் அடிக்க வேண்டும் என்பது என்னுடைய இலக்கு கிடையாது. போட்டிகளை வெல்ல விரும்பும் நான் எப்போதும் அணிக்கு சிறந்த செயல்பாடுகளைக் கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் ஒரு சீசனில் 600 – 700 ரன்கள் அடித்த போதிலும் கோப்பையை வெல்லவில்லையெனில் அதில் பயனில்லை”

- Advertisement -

என்ன பயன்:

“2019 உலகக் கோப்பையிலேயே என்னுடையப் பாடங்களை நான் கற்றுக் கொண்டேன். உங்களால் இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பையை வெல்ல முடியா விட்டால் பின்னர் 500 600 ரன்கள் அடித்து என்ன பயன்? அது எனக்கு நன்றாக இருக்கும். ஆனால் என்னுடைய அணிக்கு எந்த உதவியும் செய்யாது. அதே சமயம் என்னுடைய 30 ரன்கள் அணியின் வெற்றிக்கு உதவும் என்று சொல்லவில்லை”

இதையும் படிங்க: ஆஸியை பயமுறுத்தும் ஜஸ்ப்ரித் பும்ரா பந்து வீச்சின் ப்ராட்மேன்.. நானே அதை பக்கத்துல பாத்தேன்.. ஆடம் கில்கிறிஸ்ட்

“அணிக்கு உதவும் விஷயங்களில் பங்காற்றுவதிலேயே என்னுடைய கவனம் இருக்கிறது. ஒரு பேட்ஸ்மேனாக அன்றும் இன்றும் என்னுடைய ஆட்டத்தில் எதுவும் மாறவில்லை. கேப்டனாக இருந்த போதும் பேட்ஸ்மேனாக இருப்பதே எனது முதல் வேலை. அதன் பின்பே கேப்டனாக வேலை செய்வேன். தற்போது கேப்டனாக இல்லாததால் அணிக்கு ரன்கள் அடிப்பதே என் வேலை” என்று கூறினார்.

Advertisement