
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக இந்திய அணி தகுதி பெறாமல் வெளியேறியது. அந்தத் தோல்விக்கு சீனியர் வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் அவர்களிடம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின.
குறிப்பாக உங்களுடைய ஆட்டத்தை போதுமான அளவுக்கு பார்த்து விட்டதாக சீனியர்களிடம் கம்பீர் காரசாரமாக பேசியதாக செய்திகள் தெரிவித்தன. அதற்கேற்றார் போல் கடைசி போட்டியில் ரோஹித் சர்மா தன்னைத் தானே அணியிலிருந்து நின்று கொண்டார். அந்த வகையில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆதரவு கொடுக்கவில்லை என்பது தெரிய வந்தது.
அதனால் வழக்கம் போல அவர்களுக்குள் சண்டையா என்ற பேச்சுக்கள் சமூகவலைத்தளங்களில் காணப்படுகின்றன. இந்நிலையில் கௌதம் கம்பீருக்கும் தமக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் கம்பீர் திட்டங்களை களத்திற்கு வெளியே வகுத்துக் கொடுப்பார் என்று கூறும் அவர் களத்தில் அனைத்தையும் தாமே முடிவெடுப்பதாக கூறியுள்ளார்.
அப்படி தங்களுக்குள் நடப்பதை வெளியில் இருப்பவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் ரோகித் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் இருவரும் தெளிவாக இருக்கிறோம். பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை பற்றி நான் இங்கே உட்கார்ந்து விவாதிக்க போவதில்லை”
“அது என்னுடைய மனதில் இருக்கிறது. கௌதம் கம்பீர் சரியானவர். ஒரு முறை நாங்கள் களத்திற்குள் நுழைந்து விட்டால் அவர் கேப்டன் செய்வதை முழுமையாக நம்புகிறார். மற்ற அடிப்படையான விஷயங்கள் களத்திற்கு வெளியே மட்டுமே நடக்கும். களத்திற்குள் சென்றதும் நான் என்ன செய்கிறேன் என்பதை பொறுத்தது. அது போன்ற நம்பிக்கை தான் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ளோம்”
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் ட்ராபியை பாகிஸ்தானே ஜெய்க்கும்.. இந்த பலம் இருந்தா மட்டுமே இந்தியாவுக்கு வாய்ப்பு.. கவாஸ்கர், பதான் பேட்டி
“அது அப்படித் தான் இருக்க வேண்டும்” என்று கூறினார். இது போக ரஞ்சிக் கோப்பையில் தாம் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் விரைவில் விளையாட உள்ளதாகவும் ரோஹித் சர்மா அறிவித்துள்ளார். இதற்கிடையே இந்திய வீரர்கள் எப்போதும் ஒன்றாக இருந்து ஒன்றாக பயிற்சிகளை செய்து விளையாட வேண்டும் என்று பிசிசிஐ புதிதாக பத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.