- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணி யாரையும் நம்பில்ல.. ஷமிக்கு பதிலா அந்த 2 இளம் வீரர்கள் ஆஸிக்கு வரலாம்.. ரோஹித் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி 2023 உலகக் கோப்பையில் விளையாடினார். அந்தத் தொடரில் காயத்துடன் பந்து வீசி இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அந்த சிகிச்சைக்கு பின் ஒரு வருடமாகியும் அவர் இன்னும் முழுமையாக குணமடைந்து இந்தியாவுக்காக மீண்டும் விளையாடவில்லை.

இருப்பினும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் ஷமி கண்டிப்பாக விளையாடுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருந்தார். அந்த சூழ்நிலையில் தற்போது பயிற்சி எடுக்கும் போது ஷமி புதிய காயத்தை சந்தித்துள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ளார். எனவே 100% குணமடையாமல் ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல மாட்டோம் என்றும் ரோஹித் சர்மா கூறினார்.

- Advertisement -

ஷமி காயம்:

இந்நிலையில் இந்திய அணி ஷமி அல்லது தாம் உட்பட எந்த தனிப்பட்ட வீரர்களையும் நம்பியிருக்கவில்லை என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். எனவே ஷமி குணமடையாவிட்டால் ஆஸ்திரேலிய தொடருக்கு ஹர்ஷித் ராணா, நித்திஷ் ரெட்டி போன்ற இளம் வீரர்களை தேர்ந்தெடுத்து வருங்காலத்தை வளர்க்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி ரோஹித் சர்மா பேசியது பின்வருமாறு.

“பேட்டிங்கில் எங்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கிறது. அதே நிலைமையை பந்து வீச்சில் உருவாக்க விரும்புகிறோம். நாளை யாருக்கு எதாவது நேர்ந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாத அளவுக்கு நாங்கள் பெஞ்சில் உள்ள வீரர்களை வலுவாக உருவாக்க விரும்புகிறோம். நாங்கள் சில தனிநபர்களை அதிகமாக சார்ந்திருக்க விரும்பவில்லை. அது சரியான விஷயமும் அல்ல”

- Advertisement -

இளம் வீரர்கள்:

“நாங்கள் வருங்காலத்தை பார்த்து அதற்குத் தகுந்த வீரர்களை உருவாக்குவது அவசியம். எனவே நாளை ஒரு வேகப்பந்து வீச்சாளாருக்கு பதிலாக மற்றொருவர் தயாராக இருப்பதாக நாங்கள் உணர்ந்தால் அந்த வீரர் களமிறங்க தயாராகி இருக்க வேண்டும். நமது வீரர்கள் துலீப், இராணி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளனர். எனவே அவர்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம்”

இதையும் படிங்க: 4, 4, 4, 4, 4, 4..ஒரே ஓவரில் 6 ஃபோர்ஸ்.. 89க்கு ஆல் அவுட்.. இந்தியா போல வெ.இ அணியை வலையில் இழுத்த இலங்கை

“கொடுக்கப்பட்ட குறுகிய வாய்ப்பில் சில வீரர்கள் அசத்தியுள்ளனர். அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராக இருக்கிறார்களா என்பதை நாங்கள் பார்ப்போம். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளுக்கு பார்ப்போம். ஏனெனில் அது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை விட வித்தியாசமானது. நித்திஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோர் திறமையானவர்கள். வருங்காலத்தில் அவர்கள் நல்ல வளைவுத் தன்மையை கொடுப்பார்கள். எனவே அவர்களை இந்திய அணியில் வைத்து பார்ப்பது நல்லது. இதுவே இந்திய கிரிக்கெட்டை வளப்படுத்தும்” என்று கூறினார்.

- Advertisement -