- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலிக்கு இது சாதாரணம்.. நினச்ச அணியை வெச்சு ஆஸியை வீழ்த்திட்டோம்.. ஃபைனலுக்கு தயார்.. ரோஹித் பேட்டி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா தகுதி பெற்றுள்ளது. நான்காம் தேதி துபாயில் நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 265 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 73 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 84 ஸ்ரேயாஸ் ஐயர் 45 கேஎல் ராகுல் 42 ரன்கள் அதிகபட்சமாக எடுத்து 48.1 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். அதனால் இத்தொடரிலிருந்து ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்த இந்தியா 2023 உலகக்கோப்பை ஃபைனல் தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

- Advertisement -

இந்தியா வெற்றி:

இந்நிலையில் விராட் கோலிக்கு இதெல்லாம் சாதாரணம் என்பது போல் கேப்டன் ரோஹித் ஒற்றை வரியில் பாராட்டியுள்ளார். மேலும் நீண்ட நாட்களாக நினைத்த 6 பவுலர்கள், 5 பேட்ஸ்மேன்கள் கொண்ட இந்திய அணியை இத்தொடரில் சிறப்பாக உருவாக்கி ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடைசிப் பந்து வீசும் வரை எதுவும் உறுதியில்லை”

“பாதி இன்னிங்ஸில் இந்த ஸ்கோர் எடுக்கக்கூடியது என்று நாங்கள் கருதினோம். இந்த பிட்ச் உங்களுடைய இயற்கையான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்கவில்லை. இருப்பினும் பேட்டிங்கில் நாங்கள் தெளிவாக செயல்பட்டோம். எங்களுடைய சேஸிங்கில் நாங்கள் பொறுமையுடன் இருந்தோம். இந்த பிட்ச் நியூசிலாந்துக்கு எதிரான கடந்தப் போட்டியை விட கொஞ்சம் நன்றாகவே இருந்தது”

- Advertisement -

ஃபைனலுக்கு தயார்:

“எதுவாக இருந்தாலும் வெற்றி என்பது நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதைப் பொறுத்தது. எங்களுடைய அணியில் நிறைய அனுபவமிக்க வீரர்கள் இருக்கிறார்கள். 6 பவுலர்கள் அதே சமயம் பேட்டிங் வரிசையில் நல்ல ஆழம் கொண்ட இது போன்ற அணியை இந்தியா கொண்டிருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன். இந்த அணியை உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள் செல்ல வேண்டும். விராட் கோலி இதை பல வருடமாக செய்து வருகிறார். நாங்கள் பேட்டிங் செய்யும் போது பொறுமையாக இருந்தோம்”

இதையும் படிங்க: பாகிஸ்தான் போல ஆஸியை அடிக்க.. துபாய் பிட்ச்சில் இதை செஞ்சேன்.. இந்தியாவின் ஆட்டநாயகன் கோலி பேட்டி

“ஹர்திக் பாண்டியா பினிஷிங் செய்த விதம் மிகவும் முக்கியமானது. நீங்கள் பைனலுக்கு செல்லும் போது அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதை விரும்புவீர்கள். அதே போல எங்களது அனைத்து வீரர்களும் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தி எங்களுக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுக்கிறார்கள். ஃபைனல் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. 2 அணிகளுமே (நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா) நல்லதாக இருப்பதாலேயே செமி ஃபைனலில் இருக்கிறார்கள். இது போன்ற அழுத்தமான தொடரில் கொஞ்சம் இடைவெளி எடுத்து ரிலாக்ஸ் செய்து பின்னர் பைனல் பற்றி சிந்திப்பது நல்லது” என்று கூறினார்.

- Advertisement -