- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவின் வரலாறே மாறிப்போச்சு.. ரோஹித் சர்மா ரொம்ப நல்லவரா இல்லாம இதை செஞ்சுருக்கலாம்.. சல்மான் பட்

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை போராடி சமன் செய்த இந்திய கிரிக்கெட் அணி 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கொழும்புவில் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 64 ரன்கள் குவித்த நல்ல துவக்கத்தை கொடுத்தார்.

ஆனால் எதிர்புறத்தில் அக்சர் படேல் 44 ரன்கள் எடுத்ததை தவிர்த்து விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர். அதனால் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா 27 வருடங்கள் கழித்து இலங்கைக்கு எதிராக ஒரு தொடரில் வெற்றி பெறும் வாய்ப்பை நழுவ விட்டது. அந்த வகையில் ரோஹித் சர்மாவை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியது இந்த தோல்விக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

ரொம்ப நல்லவரா இருக்காதீங்க:
அந்த சூழ்நிலையில் எதற்காகவும் சொந்த சாதனைகளைப் பற்றி சுயநலமின்றி அதிரடியாக விளையாடும் தம்முடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று 2வது போட்டியின் முடிவில் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். இந்நிலையில் ரோஹித் சர்மா ரொம்பவும் சுயநலமின்றி நல்லவராக இல்லாமல் ஃபினிஷிங் செய்திருக்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் கூறியுள்ளார்.

அத்துடன் சுழல் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியவர்கள் என்ற வரலாற்றைக் கொண்ட இந்திய பேட்ஸ்மேன்கள் தற்போது இலங்கையிடம் தடுமாறுவதாக அவர் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் சல்மான் பட் பேசியது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டின் சமீப கால வரலாற்றில் ஸ்பின்னர்களுக்கு எதிரான ஆட்டம் கட்டுக்கோப்பாக இல்லை”

- Advertisement -

“இந்திய அணியின் டாப் வீரர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறுகின்றனர். இருப்பினும் அப்போட்டியில் கட்டுப்பாட்டில் இருந்த ஒருவர் ஆட்டத்தை முடித்திருக்க கூடியவர் என்றால் அது அவர்களின் கேப்டன் ரோகித் சர்மா. 64 ரன்கள் அடித்த பின் அவர் தன்னுடைய அணி தடுமாறுவதாக உணர்ந்து ரிவர்ஸ் ஷாட் அடித்தார். இருப்பினும் நல்ல ஃபார்மில் இருப்பதால் ரோஹித் சர்மா அங்கே சுயநலமின்றி இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை”

இதையும் படிங்க: கம்பீர் திமிரானவர் இல்ல குழந்தை மாதிரி.. கொல்கத்தா போல இந்திய அணியில் அதை செய்வாரு.. அவரின் கோச் பேட்டி

“இந்த ரன்களை அடிக்க முடியாத அளவுக்கு இலங்கையின் பவுலிங் அற்புதமாக இருந்ததாகவும் எனக்கு தெரியவில்லை. எனவே மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் என்ன நடந்தது என்பதை புரிந்து விளையாடவில்லை. மறுபுறம் அது டி20 போட்டி அல்லது இலக்கு பெரியதாக இருந்தால் ரோகித் அப்படி ஒரு ஷாட்டை அடித்து அவுட்டானால் பரவாயில்லை. ஆனால் இலக்கு குறைவாக இருந்த போது நல்ல துவக்கத்தை கொடுத்த நீங்களே நீண்ட நேரம் என்று போட்டியை முடித்திருக்கலாமே?” எனக் கூறினார்.

- Advertisement -