கம்பீர் திமிரானவர் இல்ல குழந்தை மாதிரி.. கொல்கத்தா போல இந்திய அணியில் அதை செய்வாரு.. அவரின் கோச் பேட்டி

Gautam Gambhir Coach
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். ராகுல் டிராவிட் ஓய்வுக்கு பின் பொறுப்பேற்ற அவர் பயிற்சியாளராக வந்ததும் ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்டு சூரியக்குமாரை புதிய டி20 கேப்டனாக தேர்வு செய்தார். அதே போல அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் ஆகியோரை இலங்கை தொடரில் கழற்றி விட்ட அவர் சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்தார்.

அது விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் அவர் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் வரிசையை மாற்றியது தோல்வியை கொடுத்தது. அதனால் ஆரம்பத்திலேயே கௌதம் கம்பீர் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்னும் கௌதம் கம்பீர் குணத்தில் குழந்தையாகவே இருப்பதாக அவருடைய பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குழந்தை கம்பீர்:
அதே சமயம் இந்த வருடம் கொல்கத்தா அணியில் சுனில் நரேனை பேட்ஸ்மேனாக பயன்படுத்தி வெற்றி கண்டதைப் போன்ற மாற்றத்தை இந்திய அணியில் கம்பீர் ஏற்படுத்துவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் ஒரு அப்பாவி குழந்தை. இன்றும்
அவர் 12 வயது சிறுவனைப் போன்றவர்”

“அவர் திமிர்பிடித்தவர் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது வெற்றி பெறுவதற்கான அவரது அணுகுமுறை. போட்டி முடிந்த பின் அவரை நான் வலைப்பயிற்சியில் ஈடுபடுத்துவேன். போட்டிகளில் தோற்ற பின் அவர் அழுவார்.
ஆரம்ப காலங்களில் அவருக்கு தோல்வி பிடிக்கவில்லை. அவரைப் போன்றவர் அனைத்து நேரங்களிலும் சீரியஸாக இருப்பது போல் தெரியும். கௌதம் கம்பீர் ஆக்ரோஷமானவர் என்று அனைவரும் நினைக்கிறார்கள்”

- Advertisement -

“ஆனால் அன்பான இதயத்தை கொண்ட அவர் பல இளம் வீரர்களின் கேரியரை உருவாக்கியுள்ளார். கம்பீரப் பெரும்பாலும் டெக்னிக்கலை பின்பற்ற மாட்டார். ஏனெனில் நீங்கள் டெக்னிகல் அளவில் நன்றாக இருப்பதாலேயே விளையாட்டில் இந்த உச்சத்தை தொட்டிருப்பீர்கள். எனவே தந்திரங்கள் அடிப்படையில் தான் கௌதம் கம்பீர் வேலை செய்வார். தங்கள் மீது உறுதியாக இல்லாத வீரர்களிடம் அவர் நம்பிக்கையும் வலுவையும் ஊட்டுவார்”

இதையும் படிங்க: கேப்டனாக தோனியின் 6 வருட சாதனையை உடைத்த ரோஹித் சர்மா.. அஸ்வினையும் முந்தி அசத்தல்

“3 மாதங்களுக்கு முன்பாகவே அவர் சுனில் நரேனிடம் பந்து வீச்சில் எதுவும் வேண்டாம், பேட்டிங்கில் வேலை செய்யுங்கள் என்று சொல்லி விட்டார். திறமையானவர் என்று உணர்ந்து விட்டால் அந்த வீரருக்கு கம்பீர் பெரிய ஆதரவு கொடுப்பார். அவரிடம் பயமின்றி வெற்றி பெறுவதை வழக்கமாக வைத்திருக்கும் பயிற்சியாளருக்கு தேவையான அணுகுமுறை உள்ளது” என்று கூறினார். அந்த வகையில் சில விமர்சனங்கள் இருந்தாலும் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் ரிங்கு சிங், சூரியகுமார், ரியன் பராக், ரோஹித் சர்மா போன்ற பகுதி நேர பவுலர்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement