கேப்டனாக தோனியின் 6 வருட சாதனையை உடைத்த ரோஹித் சர்மா.. அஸ்வினையும் முந்தி அசத்தல்

Rohit Sharma MS Dhoni
- Advertisement -

இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இருப்பினும் அந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே கையில் வைத்திருந்த வெற்றியை நழுவ விட்ட இந்தியா போராடி சமன் செய்தது. ஆனால் 2வது போட்டியில் அதை விட மோசமாக விளையாடிய இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அதனால் 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா நழுவ விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக இத்தொடரில் பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி 58, 64 ரன்கள் விளாசினார். அதனால் 2 போட்டிகளிலுமே நல்ல துவக்கத்தை பெற்ற இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

தோனியை முந்தி அசத்தல்:
ஆனால் ரோஹித் சர்மா அவுட்டான பின் எதிர்ப்புறம் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதனால் தங்களை விட பலம் குறைந்த இலங்கை அணியிடம் தோற்றது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் இத்தொடரில் சிறப்பாக விளையாடும் ரோஹித் சர்மா ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட், சச்சின் ஆகியோரது சாதனைகளை உடைத்திருந்தார்.

அந்த வரிசையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் அதிக வயதில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட வீரர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை உடைத்துள்ள ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். கடைசியாக 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதன் பின் சுமார் 9 மாதங்கள் கழித்து தற்போது தான் அவர் ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் இத்தொடரில் 37 வருடம் 96 நாட்கள் வயதுடன் களமிறங்கிய போது தோனியை முந்தி ரோஹித் சர்மா இந்த சாதனையை படைத்தார். இதற்கு முன் கடந்த 2018 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 வருடம் 80 நாட்கள் வயதில் தோனி இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டதே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: இந்திய அணியில் இந்த குறை ரொம்ப அதிகமாவே இருக்கு.. ப்ளீஸ் ருதுராஜை அணிக்குள் கொண்டுவாங்க – ரசிகர்கள் கோரிக்கை

அதே போல 2வது போட்டியில் நீண்ட நாட்கள் கழித்து ரோஹித் சர்மா பந்து வீசினார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் அதிக வயதில் பந்து வீசிய இந்திய வீரர்களின் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வினை முந்திய ரோகித் சர்மா 3வது இடத்தை பிடித்து அசத்துள்ளார். அந்த பட்டியல:
1. சச்சின் டெண்டுல்கர்: 38 வருடம் 329 நாட்கள்
2. ஸ்ரீனிவாசன் வெங்கட்ரராகவன் : 37 வருடம் 351 நாட்கள்
3. ரோஹித் சர்மா : 37 வருடம் 96 நாட்கள்*
4. ரவிச்சந்திரன் அஸ்வின் : 37 வருடம் 21 நாட்கள்

Advertisement