
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பையில் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தொடரில் தோல்வியே சந்திக்காமல் அசத்திய இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்று சாதனையும் படைத்தது.
அந்த வகையில் சரித்திரம் படைத்த இந்திய அணியினர் ஜூலை நான்காம் தேதி மும்பையில் உள்ள கடற்கரை சாலையில் திறந்தவெளி பேருந்தில் சென்று ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாட்டினர். அவர்களை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் திறந்ததால் கடற்கரை சாலையே ஸ்தம்பித்துப் போனது. அங்கே ரசிகர்களை சந்தித்த இந்திய அணியினர் பின்னர் வான்கடே கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றனர்.
அம்மாவின் பாசம்:
அங்கு இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் சிறப்பு பாராட்டு விழா நடத்தப்பட்டு 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அப்படி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற கேப்டன் ரோஹித் சர்மா இறுதியில் தன்னுடைய அம்மா பூர்ணிமாவை பார்க்கச் சென்றார். அப்போது மிகப்பெரிய கூட்டத்திற்கும் மத்தியில் தன்னுடைய மகனை வாரி முத்தமிட்ட அம்மா நெத்தியிலும் 2 கன்னங்களிலும் முத்தமிட்டு முத்தத்தால் பாச மழையை பொழிந்தார்.
அருகிலேயே ரோகித் சர்மாவின் தந்தை தன்னுடைய மகன் நாட்டுக்காக செய்த சாதனையை பார்த்து பேச வார்த்தைகளின்றி நின்றார். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று ஓய்வு பெறுவேன் என்று சொன்னதை ரோஹிட் செய்து காட்டியுள்ளதாகவும் அம்மா பூர்ணிமா கூறியுள்ளார். மேலும் ஜூலை 4ஆம் தேதி தமக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்றாலும் இந்திய அணியின் வெற்றிப் பேரணியை பார்ப்பதற்காக வந்ததாக அவர் கூறினார்.
இது பற்றி அம்மா பேசியது பின்வருமாறு. “இந்த நாளை பார்ப்பேன் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. உலகக்கோப்பைக்கு செல்வதற்கு முன்பாகவே எங்களை சந்தித்த ரோகித் டி20 கிரிக்கெட்டில் விடை பெற விரும்புவதால் வெற்றி பெற விரும்புவதாக கூறினார். இன்று நான் கொஞ்சம் நன்றாக உணரவில்லை என்பதால் மருத்துவரை பார்க்க செல்லவிருந்தேன். ஆனால் இந்த நாளை பார்ப்பதற்காக இங்கே வந்தேன்”
இதையும் படிங்க: டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறேனா? நெத்தியடி பதிலளித்த ஜஸ்ப்ரீத் பும்ரா – என்ன சொன்னாரு தெரியுமா?
“இங்கே ரசிகர்கள் எழுப்பும் சத்தத்தை பார்த்த பின் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியை என்னால் விவரிக்க முடியவில்லை. இது போன்ற சூழ்நிலையை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. தன்னுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக ரோகித் ஏராளமான அன்பை பெறுகிறார். இன்று நான் பெருமையான மகிழ்ச்சியான அம்மாவாக இருக்கிறேன். இதற்கு மேல் என்ன கேட்க வேண்டும்? இது போன்ற நாள் மீண்டும் வராது. இது போன்ற நாளு