ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்காவில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான விருதை அந்தந்த வீரர்களுக்கு ஐசிசி அனுப்பி வைத்துள்ளது. அதில் 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் விருந்துக்கான விருதை சூரியகுமார் யாதவை பெற்றுக் கொண்டார்.
அந்த வரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 2023ஆம் ஆண்டின் ஐசிசி கனவு ஒருநாள் அணியில் இடம் பிடித்திருந்தார். அவருக்கான விருது தொப்பியை கேப்டன் ரோஹித் சர்மாவின் கையில் கொடுத்து கொடுக்குமாறு ஐசிசி கேட்டுக்கொண்டது. அதை ஏற்றுக் கொண்ட ரோகித் சர்மா இந்திய அணியின் சொத்தாக செயல்பட்டு வரும் குல்தீப் யாதவ் இந்த விருதுக்கு தகுதியானவர் என்று பாராட்டி தொப்பியை பரிசளித்தார்.
கலாய்த்த ரோஹித்:
அதைப் பெற்றுக் கொண்ட குல்தீப் யாதவ் கடந்த வருடம் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் சிறப்பாக விளையாடியதால் தமக்கு இந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார். அதைக் கேட்டு வியப்படைந்த ரோகித் சர்மா எனக்கு தெரியாமல் எப்போது நீ பேட்டிங்கில் அசத்தினாய்? என்று சொல்லி கலாய்த்தார். இது பற்றி அவர்களுக்கிடையே நிகழ்ந்த உரையாடல் பின்வருமாறு.
ரோஹித்: இந்திய அணியின் உண்மையான சொத்தாக இருக்கும் இந்த விளையாட்டு வீரருக்கு அற்புதமான தொப்பியை பரிசளிப்பது எனக்கு உண்மையாக இருக்கிறது
குல்தீப்: நன்றி, ரோஹித் பாய்
ரோஹித்: நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?
குல்தீப்: இல்லை. நல்லது
ரோஹித்: நீ ஏதாவது சொல்ல வேண்டும்
குல்தீப்: நான் சொல்வதற்கு பெரிதாக எதுவுமில்லை. இருப்பினும் கடந்த வருடம் எனக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவை சிறப்பாக அமைந்தது
ரோஹித்: பேட்டிங்கிலா? எப்போது?
குல்தீப்: அதாவது, அப்போது தான்
ரோஹித்: எப்போது?
குல்தீப்: டெஸ்ட் தொடரில்
ரோஹித்: இது ஒருநாள் கிரிக்கெட்டுக்காக வழங்கப்பட்ட பரிசு
குல்தீப்: ஆனால் நான் பேட்டிங்கிலும் அசத்தினேன். கடந்த உலகக் கோப்பையில் எனது பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது
ரோஹித்: நான் தான் அணியின் கேப்டனாக இருந்தேன். ஆனால் இவர் பேட்டிங் செய்ததை நான் பார்த்ததில்லை. எனவே அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை
குல்தீப்: நன்றி ரோஹித் பாய்
இதையும் படிங்க: என்னோட கேப்டன்ஷியே வேற.. அதை நம்பி ஃபாலோ பண்ணுவேன்.. 2024 டி20 உ.கோ முன் ரோஹித் சர்மா பேட்டி
என்று அவர்கள் பேசியது அரங்கத்தில் இருந்தவர்களை சிரிக்க வைத்தது. இருப்பினும் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் குல்தீப் யாதவ் – துருவ் ஜுரேலுடன் சேர்ந்து பேட்டிங்கில் முக்கிய ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார். ஆனால் அதை மறந்து ரோஹித் சர்மா எனக்கு தெரியாமல் எப்போது பேட்டிங் செய்தாய்? என்று கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.



