
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதிய முதல் இரண்டு ஆட்டங்களிலும் இரு அணிகளும் ஒரு வெற்றியை பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ள வேளையில் சற்று முன்னர் ஹைதராபாத் நகரில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி துவங்கியது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் சற்று முன்னர் நடைபெற்ற டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்தியா முதலில் பவுலிங் செய்யும் என்று அறிவித்தார்.
அதன்படி தற்போது ஆஸ்திரேலியா அணியானது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த கடைசி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் ஒரு முக்கிய மாற்றத்தை கேப்டன் ரோகித் சர்மா செய்துள்ளார்.
அதன்படி கடந்த போட்டியில் கூடுதல் பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை தவிர்த்து இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் இல்லை. அதன்படி கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் படேல், 8) ஹர்ஷல் படேல், 9) பும்ரா, 10) புவனேஷ்வர் குமார், 11) யுஸ்வேந்திர சாஹல்.