
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது இன்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் முதல் போட்டியில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்களான விராட் கோலி, ரிஷப் பேண்ட், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக எந்தெந்த வீரர்கள் நீக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த வேளையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்தின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.
பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து அறிவித்தார். அதன்படி இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் இணைவதனால் இஷான் கிஷன், தீபக் ஹூடா, அக்சர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது தங்கள் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் இடம் பறிபோகுமோ என்ற அச்சம் எழுந்த வேளையில் ரோகித் சர்மா தினேஷ் கார்த்திகை பினிஷர் ரோலில் களமிறங்க வைத்துவிட்டு இஷான் கிஷனை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தில் துவக்க வீரராக ரிஷப் பண்டினை விளையாட வைத்துள்ளார். அவரது இந்த முடிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.
ஏனெனில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் தற்போது பினிஷிங் ரோலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இஷான் கிஷன் வெளியேற்றப்பட்டது சரியான முடிவுதான் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : குழப்பத்தில் ரசிகர்கள் – ஜடேஜாவுடன் சண்டையா, சிஎஸ்கே நிர்வாகம் அளித்த அதிகாரபூர்வ பதில் இதோ
1) ரோஹித் சர்மா, 2) ரிஷப் பண்ட், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) ரவீந்திர ஜடேஜா 8) ஹர்ஷல் படேல், 9) புவனேஷ்வர் குமார், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) யுஸ்வேந்திர சாஹல்