மீண்டும் ஓப்பனராக களமிறங்க காத்திருக்கும் ரோஹித் சர்மா.. அப்போ கே.எல் ராகுல் எங்கு – விளையாடுவார் தெரியுமா?

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

துவக்க வீரராக களமிறங்க காத்திருக்கும் ரோஹித் சர்மா :

அதனை தொடர்ந்து அடிலெய்டு மைதானத்தில் இரண்டாவதாக நடைபெற்ற பகலிரவு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமமானது.

- Advertisement -

அதனை தொடர்ந்து பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டி டிராவானது. அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நாளைய டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழ உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்த தொடரில் இதுவரை துவக்க வீரர்களாக களமிறங்கி வந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரது ஜோடி மீண்டும் பிரிய காத்திருக்கிறது. ஏனெனில் இது தொடரின் முதல் போட்டியை தவறவிட்ட ரோஹித் சர்மா இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் ஆறாவது வீரராக களமிறங்கினார்.

- Advertisement -

ஆனால் அவரால் அந்த இடத்தில் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் போனது. அதன் காரணமாக மீண்டும் ஜெய்ஸ்வாலுடன் ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக கே.எல் ராகுல் மூன்றாவது இடத்திலும், சுப்மன் கில் நான்காவது இடத்திலும், விராட் கோலி ஐந்தாவது இடத்திலும் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இந்தியாவுக்காக 765 விக்கெட்ஸ் எடுத்தும்.. ஃபேர்வெல் வேண்டாமென ஓய்வு பெற்றது ஏன்? அஸ்வின் விளக்கம்

அதே போன்று நாளைய இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளரான நிதீஷ் குமார் ரெட்டி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக ரவீந்திர ஜடேஜாவுடன், வாஷிங்டன் சுந்தர் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement