மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறி அந்த டீமுக்கு தான் போறீங்களா? – கேள்வியெழுப்பிய புகைப்படம்

Rohit
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மா ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் முழுநேர பேட்ஸ்மேனாகவே விளையாடி இருந்தார். ஆனால் இந்த தொடரில் மும்பை அணி 14 போட்டிகளில் விளையாடி 10 தோல்விகளை சந்தித்து கடைசி இடத்தை பிடித்து வெளியேறி இருந்தது.

மேலும் ஹார்டிக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதில் ரோகித் சர்மாவிற்கு விருப்பமில்லை என்பதனால் நிச்சயம் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறி ரோகித் சர்மா வேறொரு அணிக்கு செல்வார் என்று பரவலாக பேசப்பட்டது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இரண்டு அணிகளில் ஒன்றிற்கு ரோகித் சர்மா செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டது. மேலும் ரோகித் சர்மாவுடன் அந்த அணியில் இருந்து பும்ராவும் வெளியேறுவார் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது ரோகித் சர்மா அடுத்த ஆண்டு லக்னோ அணிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்ற மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்த பின்னர் அந்த அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா நீண்ட நேரம் மைதானத்தில் ரோஹித் சர்மாவுடன் உரையாடினார்.

- Advertisement -

அப்போது ரோகித் சர்மாவும் அவருடன் சிரித்துக்கொண்டே பேசிக் கொண்டிருந்தார். இப்படி நடைபெற்ற இந்த உரையாடல் மைதானத்திலேயே சில நிமிடங்கள் வரை நீடித்தது. இந்நிலையில் தற்போது டி20 உலக கோப்பை நடந்து வரும் வேளையில் லக்னோ அணியின் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ள ஒரு ஏற்பாடு ரோகித் சர்மாவை அவர்களது அணிக்கு வர வைக்க இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் லக்னோ அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் :

இதையும் படிங்க : இந்தியா தங்களோட பேட்டிங்ல பெரிய தப்பு பண்ணிட்டாங்க.. பாகிஸ்தான் ஜெயிக்க வாய்ப்பிருக்கு.. கம்ரான் அக்மல்

இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிற்காக நாங்கள் எடிட் செய்துள்ள வீடியோ என்று “தி கிரேட்டஸ்ட் சிக்ஸ் ஹிட்டர் எவர்” என்ற தலைப்பில் அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் லக்னோ அணி இப்படி ஸ்பெஷல் வீடியோ போட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்க என்ன காரணம்? ஒருவேளை அவர்கள் தான் ரோகித் சர்மாவை 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் எடுக்கப்போகிறார்களோ? என்ற கேள்வியை எழுப்பி வருவது குறிப்பிடப்பட்டது.

Advertisement